Published : 30 Sep 2013 04:42 PM
Last Updated : 30 Sep 2013 04:42 PM

எம்.எஸ்சி. புள்ளியியல் பட்டதாரிகளும் கணித ஆசிரியர் ஆகலாம்

சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. புள்ளியியல் படிப்பை எம்.எஸ்சி. (கணிதம்) பட்டத்துக்கு இணையானதாக கருதி, முதுகலை கணித பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா வெளியிட்டுள்ளார்.

அரசின் இந்த புதிய உத்தரவைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக எம்.எஸ்சி. புள்ளியியல் படிப்புடன் பி.எட். முடித்திருப்பவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரும் தகுதியைப் பெறுவார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியில் சேரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x