வேலை வேண்டுமா? - மத்திய அரசுப் பணி

வேலை வேண்டுமா? - மத்திய அரசுப் பணி
Updated on
1 min read

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) விரைவில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, மத்திய உள்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை, மத்திய கப்பல் துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் கீழ் துணைப் பேராசிரியர், துணை மத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர் பணியிடங்களை நிரப்புகிறது.

காலிப் பணியிட விவரம்:

துணைப் பேராசிரியர் (Specialist Grade-III, Assistant Professor): 39

துணை மத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர் (Deputy Central Intelligence Officer): 06

உதவி சட்ட ஆலோசகர் (Assistant Legislative Counsel, (Grade-IV of Indian Legal Service): 08.

உதவி செயற்பொறியாளர்-சிவில்(Assistant Executive Engineer (Civil)): 04

இளநிலை கப்பல் அளவையர் மற்றும் தொழில்நுட்ப உதவி இயக்குநர்(Junior Ship Surveyor-cum-Assistant Director General): 01

ரேடியோ ஆய்வாளர்(Radio Inspector): 01

பேராசிரியர் (Professor (Technical) (ECE-Department of Training & Technical Education): 03

சம்பள விவரம்: ரூ.5600- 39100/-

தேவையான தகுதிகள்: இந்தப் பணிகளுக்கு அந்தந்த பிரிவில் டிப்ளமோ, எம்.பி.பி.எஸ், பி.இ, பி.டெக் மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.25-னை ஆன்லைன் அல்லது ஸ்டேட் வங்கியில் நேரடியாக செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2017.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: >http://www.upsconline.nic.in

மேலும் விபரம் அறிய: >www.upsconline.nic.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in