Last Updated : 08 Aug, 2016 12:06 PM

 

Published : 08 Aug 2016 12:06 PM
Last Updated : 08 Aug 2016 12:06 PM

இனி வங்கி தொடங்குவது எளிது!

வேலைக்கு போவதா அல்லது சொந்தமாக தொழில் தொடங்குவதா என்ற எண்ணம் எழும் 25-30 வயதுக்கிடையிலான நண்பர்கள் சந்தித்தால் என்ன தொழில் தொடங்கலாம், இப்போது என்ன தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கிறது என்பதுதான் பேச்சாக இருக்கும். இதுபோல பல சந்திப்புகளில் கேட்டிருக்கிறேன். ஒரு கூட்டத்தில் நான் கேட்டவை இது. `என்ன தொழிலில் லாபம் கிடைக்கும் என்பது விஷயம் அல்ல, உங்களுக்கு என்ன தெரியும் என்பதுதான் விஷயம் தெரிந்த தொழிலை செய்யுங்கள் என்று ஒருவர் கூற’, எந்த தொழிலில் நிலையான நல்ல லாபம் கிடைக்கும் என மீண்டும் லாபம் பற்றியே பேச்சு இருந்தது.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் விரக்தியில், நீங்கள் வங்கி தொடங்குங்கள். 9 சதவீதத்துக்கு டெபாசிட் வாங்கலாம், சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கு 4 சதவீதம் வட்டி கொடுத்தால் போதும், 15 சதவீதத்துக்கு கடன் கொடுக்கலாம். செலவுகள் போக நிகர லாப வரம்பு 3 சதவீதம் நிச்சயம் என்றார். மயான அமைதியில் கூட்டம் கலைந்தது.

வங்கி தொடங்குவது கடினம் என்றிருந்த நிலை மாறி இப்போது எளிதாகிவிட்டது. சமீபத்திய ஆர்பிஐ விதிமுறைகள் தளர்வு இதற்கு வழிவகுத்துள்ளது.

அந்த நண்பர்களால் இப்போது வங்கி தொடங்க முடியுமா என்று தெரியாது. ஆனால் வங்கியாளர்கள்/வங்கியில் 10 வருட அனுபவம் உள்ளவர்கள் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி புதிய வங்கி தொடங்குவதில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

வங்கிகளின் வரலாறு

எடுத்தவுடன் வங்கி தொடங்க முடியாது. வங்கி தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை. அதுவும் வங்கி தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடும் போதுதான், தகுதி வாய்ந்த நபர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். அதனை தளர்த்தி, இப்போது தகுதிவாய்ந்த நபர்கள் வங்கி தொடங்குவதற்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

1990களுக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையிலான வங்கிகளுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கி கொடுத்திருக்கிறது. 2004-ம் ஆண்டு கோடக் மஹிந்திரா மற்றும் யெஸ் வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. பத்து வருடங்களுக்கு பிறகு கடந்த 2014-ம் ஆண்டு 25 நிறுவனங்கள் வங்கி தொடங்க விண்ணப்பித்தன. இதில் பந்தன் மற்றும் ஐடிஎப்சி ஆகிய நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் இந்த இரு வங்கிகளும் செயல்பட தொடங்கி உள்ளன. இப்போது தகுதி வாய்ந்த நிறுவனங்கள்/தனிநபர்கள் வங்கி தொடங்க எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விதிமுறைகள் என்ன?

இதில் முக்கியமான விதி, பெரிய நிறுவனங்கள் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்திருக்கிறது. ஆனால் அதே சமயம் அந்த நிறுவனங்கள் வங்கிகளில் 10 சதவீத பங்குகளை வைத்திருக்கலாம் (ஆனால் இயக்குநர் குழுவில் இடம்பெற அனுமதி கிடையாது) என்றும் கூறியுள்ளது. ரூ.5,000 கோடிக்கும் மேல் வருமானம் இருக்கும் நிறுவனங்கள் கூட வங்கி தொடங்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த குழுமத்தில் உள்ள வங்கி அல்லாத நிறுவனத்தின் பங்கு 40 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். 40 சதவீதத்துக்கு மேல் இருக்கும் பட்சத்தில் வங்கி தொடங்க விண்ணப்பிக்க முடியாது.

10 வருடங்களுக்கு மேல் வங்கி அனுபவம் இருக்கும் இந்தியர்கள் வங்கி தொடங்க அனுமதிக்கப்படுவர். குறைந்தபட்சம் ரூ.500 கோடி முதலீடு இருக்க வேண்டும். வங்கித்துறையில் தற்போதைய அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு வரம்பு 74 சதவீதம். இதில் 25 சதவீத வங்கிக்கிளைகள் கிராமப்புற பகுதியில் நிச்சயம் தொடங்கியாக வேண்டும். வங்கி தனது செயல்பாட்டை தொடங்கிய ஆறு வருடங்களுக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும். வங்கியின் இயக்குநர் குழுவில் அதிகபட்ச தனிப்பட்ட இயக்குநர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.

விமர்சனங்கள் என்ன?

எப்போது வேண்டுமானலும் விண் ணப்பிக்க முடியும், தனிநபர்கள் வங்கி தொடங்கலாம் என்பது சாதகமாக அம்ச மாக இருந்தாலும், சில விமர்சனங்களும் இருப்பதாகவே இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். டாடா, ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட சில பெரிய நிறுவனங்கள் வங்கி தொடங்க முடியாது. அதேபோல பொதுத்துறை நிறுவனங்களும் விண்ணப்பிக்க முடியாது.

500 கோடி ரூபாய் நிதி மற்றும் கிராமப்புறங்களில் 25 சதவீத கிளைகள் தொடங்க வேண்டும் என்ற விதி இருப்பதால் உடனடியாக அதிக அளவு விண்ணப்பங்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பைனான்ஸியல் சர்வீசஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷ் ஐயர் தெரிவித்திருக்கிறார். இதே கருத்தை வங்கித்துறையை சேர்ந்த மேலும் சிலரும் தெரிவித்திருக்கின்றனர்.

எடில்வைஸ், இந்தியா இன்போ லைன், ராம், கேபிடல் பர்ஸ்ட் உள்ளிட்ட குழுமங்கள் வங்கி தொடங்க வாய்ப்பு இருக்கிறது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான கருத்தை வெளியிடவில்லை.

பல வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) விண்ணப்பிக்க ஆர்வ மாக இருந்தாலும் யாரும் அவசரப் படவில்லை என ரெலிகர் நிறுவனத்தின் ஆய்வுக் குறிப்பில் தெரிவித்திருக்கிறது.

தனிநபர்கள் வங்கி தொடங்க அனு மதிக்கப்பட்டிருப்பதால் வங்கியாளர்கள் பலரும் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத் துக்கு சிட்டி வங்கியில் பணிபுரிந்த விக்ரம் பண்டிட், டாய்ஷ் வங்கி பணிபுரிந்த அன்ஷு ஜெயின் ஆகியோர் விண் ணப்பிக்கலாம் என்றும், வெளிநாடுகளில் பணிபுரிந்த அவர்களால் 500 கோடி திரட்டுவது என்பது பெரிய விஷயம் அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின் றன. இவர்கள் இருவர் தவிர மேலும் பல வங்கியாளர்கள் விண்ணப்பிப்பது குறித்த ஆலோசனையில் இருக்கிறார் கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ராஜனின் பங்கு

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜனின் மூன்றாண்டு பதவி காலம் இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவு பெறும். ஆனால் அவர் பதவியில் இருந்த மூன்று வருடங்களில் வங்கித்துறையில் பல சீர்திருத்தங்களை செய்திருக்கிறார். 2 வங்கிகள், 11 பேமெண்ட் வங்கிகள், 10 சிறிய வங்கிகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறார். இதில் இரு வங்கிகள் செயல்படத்தொடங்கியுள்ளன. பேமெண்ட் வங்கி மற்றும் சிறிய வங்கிகள் இன்னும் சில மாதங்களில் செயல்பட இருக்கின்றன. இப்போது எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்க வசதியாக விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறார்.

கடந்த முறை வங்கி தொடங்க 25 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. ஆனால் கால அவகாசம் இல்லை, பெரிய நிறு வனங்களுக்கு தடை என்பதால் விண் ணப்பங்கள் குறைவாக கூட இருக்க லாம். ஆனால் வங்கித்துறையில் மேற் கொள்ளப்பட்ட மாற்றங்கள் ராஜனின் காலத்தில் நடந்தவை என்பதை வரலாறு பேசும்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x