Published : 20 Feb 2017 11:28 AM
Last Updated : 20 Feb 2017 11:28 AM

இ-வாலட்களின் எதிர்காலம்?

நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தன்னுடைய பெருமகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். இனி இ-வாலட் பயன்பாடு அதிகரிக்கும் என நம் பிக்கை தெரிவித்தார். அவரின் கணிப் புக்கு ஏற்ப வாலட் பயன்பாடு அதி கரித்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இ-வாலட்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும், அந்த பிஸினஸ் மாடல் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியாது என்றும் இந்தியாவின் முன்னணி வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமைச் செயல் அதி காரி ஆதித்யா பூரி தெரிவித்திருக் கிறார். ஆதித்யா பூரி கூறியிருப்ப தாலேயே இந்த கருத்து முக்கியத் துவம் பெறுகிறது.

காரணம் என்ன?

இ-வாலட்களுக்கு எதிர்காலம் இல்லை. இந்த பிஸினஸில் பெரிய அளவில் லாப வரம்பு கிடையாது. அதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியது. உதாரணத்துக்கு ஒரு வாலட் (பேடிஎம்-யை குறிப் பிடுகிறார்) நிறுவனத்தின் நஷ்டம் ரூ.1,651 கோடி. இ-வாலட்களின் முக்கியமான அம்சம் கேஷ் பேக் ஆபர்கள்தான். இவை மட்டும் இல்லை என்றால் இந்த வாலட் களுக்கு எதற்காக மக்கள் செல்ல வேண்டும். எங்கள் வாலட்களுக்கும் இவற்றுக்கும் என்ன வித்தியாசம்.

தவிர இந்த வாலட்களுக்கு வங்கிகளின் உதவி தேவை. அதாவது வங்கியில் இருந்துதான் பணத்தை மாற்ற வேண்டும். ஆனால் ஒவ்வொரு வங்கிகளும் பிரத்யேகமாக இ-வாலட் வைத்துள்ளன. தவிர Unified Payments Interface வந்த பிறகு வங்கி பரிவர்த்தனைகள் எளிதாக வேகமாக நடந்துள்ளன. வாலட்களுக்கு எதிராக நான் பேசவில்லை. அவர்களின் பிஸினஸ் மாடலில் லாபம் ஈட்ட முடியாது. அதனால் இந்த இ-வாலட்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என ஆதித்யா பூரி தெரிவித்திக்கிறார்.

ஒவ்வொரு வங்கிகளும் தங்களுக் கென பிரத்யேகமாக இ-வாலட் வைத்திருந்தாலும், வங்கிகளுக்கு இ-வாலட் என்பது வாடிக்கையாளர் களுக்கு கொடுக்கும் பல வசதிகளில் ஒன்றுதான் வாலட். ஆனால் பிரத்யேக வாலட் நிறுவனங் களுக்கு இது மட்டுமே முக்கியமான தொழில். தவிர அந்த தொழிலிலும் போட்டி இருக்கிற சூழ்நிலையில் ஆதித்யா பூரியின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் போன்பீ வாலட்டை ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பயன்படுத்த முடியாது. அதேபோல பேடிஎம் வாலட்டை எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பயன் படுத்த முடியாத சூழல் இருக்கிறது. தவிர வாலட்களில் இருக்கும் பணத்துக்கு வட்டி கிடையாது.

பேமெண்ட் வங்கி எதிர்காலம்?

இந்த நிலையில் பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடங்கவுள்ளது. அப்போது வாலட், வங்கி இரண்டும் இருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் என நினைக்கலாம். ஆனால் ஆதித்யா பூரி பேமெண்ட் வங்கிகளுக்கும் பெரிய எதிர்காலம் இல்லை என தெரிவித்திருக்கிறார். சில பேமெண்ட் வங்கிகள் அதிக வட்டி கொடுக்கலாம். ஆனால் நீண்ட காலம் இவ்வளவு வட்டி கொடுக்க முடியாது. தவிர புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. புதிய வாடிக்கையாளர்களை தக்க வைக்க அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்றும் ஆதித்யா பூரி குறிப்பிட்டிருக்கிறார். இது நல்ல கருத்து என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

2022-ம் ஆண்டு இ-வாலட் சந்தை 440 கோடி டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதன் எதிர்காலமே கேள்விகுறியாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x