Published : 01 May 2017 10:57 AM
Last Updated : 01 May 2017 10:57 AM

எல்ஐசி முதலீடு ஐடிசியில் இருக்கலாமா?

டாடா டிரஸ்டின் ஆர். வெங்கட ரமணன் சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார். அதில் எல்ஐசி நிறுவனத்தின் முதலீடு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அரசு மக்களின் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்தும் நிலையில் பொதுத்துறை நிறுவன மான எல்ஐசி தங்களது முதலீடு களை ஐடிசி நிறுவனத்தில் வைத் திருக்கலாமா என கேட்டிருந்தார்.

ஐடிசி நிறுவனம் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட், சுருட்டு உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது. இதில் எல்ஐசி கணிசமாக முதலீடு செய்துள்ளது. இந்த நிலை யில் இது உடல்நல ரீதியாகவும், மனசாட்சிபடியும் சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். அரசும், நிறுவன மும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிப்பதற்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், செபி, எல்ஐசி, அரசு தரப்பு விளக்கங் களை ஐந்து வாரங்களுக்குள் கேட் டுள்ளது. வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இது தொழில் துறையில் பல விவாதங்களை உருவாக்கி வருகிறது. ஏனென்றால், எல்ஐசி பல ஆண்டுகளாக, பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. அதில் ஐடிசி நிறுவன மும் ஒன்று. ஆனால் இத்தனை ஆண்டுகளில் கேட்காமல் இப்போது கேட்பதற்கு காரணம் என்ன?

எல்ஐசி பொதுமக்களிடமிருந்து பிரீமியம் தொகைகளை திரட்டு வதுடன் பல நிறுவனங்களில் முதலீடு களையும் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாகவே அதற்கு வருவாய் கிடைக்கிறது. அதிலிருந்துதான் அரசுக்கு டிவிடெண்ட் அளித்து வருகிறது

ஆனால் எல்ஐசி தனியார் அமைப்பு அல்ல. பாலிசி விநியோ கத்தில் எந்த பாகுபாடுகளையும் பார்ப்பதில்லை. இதனாலேயே எல்ஐசிக்கு மக்கள் மத்தியில் சிறந்த நற்பெயர் உள்ளது. இந்த நிலை யில்தான் டாடா டிரஸ்ட் நீதிமன்றத் தின் படியேறியுள்ளது. வெங்கட ரமணனுடன் மேலும் 7 பேர் சேர்ந்து இந்த மனுவை அளித்துள்ளனர். அதில் எல்ஐசி, மக்கள் வாழ்வதற் காக ஆசைப்படுகிறதா அல்லது மக்கள் புகைப்பிடிக்க ஊக்குவிக் கிறதா என கேள்வியெழுப்பி உள்ளனர். இதன் மூலம் பாலிசிதாரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் எல்ஐசி நிறுவனம் உள்ளது.

ஐடிசி நிறுவனத்தில் 5 பொதுத் துறை காப்பீடு நிறுவனங்கள் 32% பங்குகளை வைத்துள்ளன. நிறு வனத்தில் அரசின் முதலீடு ரூ.1.07 லட்சம் கோடியாகும். இதில் ரூ.76 ஆயிரம் கோடி எல்ஐசியின் முதலீடாகும்.

இது போன்ற விஷயத்தில் ஐடிசி நிறுவனத்துக்கு எதிராக ஏற்கெனவே பலர் வழக்கு தொடுத்துள்ளனர். குறிப்பாக புற்றுநோய் உருவாக் கத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு அதிகம் இருப்பதாகவும் குறிப்பிட் டுள்ளனர். ஆனால் தற்போது எல்ஐசி விவகாரம் வேறு விவாதத்தின் அடிப்படையிலானது.

ஐடிசியில் முதலீடு செய்ய சிறப்பு காரணங்கள் இல்லைதான். இதைவிடவும் சிறந்த முதலீடுகளை ஆராயலாம்தான். ஆனால் உலகம் முழுவதும் பொழுதுபோக்கு, மீடியா, ஆல்கஹால், பேக்கிங் உணவு, புகையிலை போன்றவை மிகப்பெரிய பிசினஸாக உள்ளன. இதிலிருந்துதான் அதிக வருவாய் வருகிறது. அல்லது ஒழுக்கக்கேடான தொழில்களை விடவும் பேங்கிங், அனைவருக்குமான வீட்டுக் கடன் நிறுவனங்களில் முதலீடு செய்தால் என்ன? இஸ்லாமியர்கள் ஹராம் பங்குகளை விலக்குவதைப் போல எல்ஐசி இது போன்ற பங்குகளில் முதலீடு செய்வதை விலக்கிக் கொண்டால் என்ன என்கிற கேள்வியும் எழும்.

ஆனால் முரண் என்னவென்றால் தற்போது வழக்கு தொடுத்துள்ள டாடா டிரஸ்ட், தனது குழுமத்தின் இந்தியன் ஓட்டல் நிறுவனங்களில் இத்தனை ஆண்டுகளாக சிகரெட் டையும், சுருட்டையும் ஏன் விற்று வருகிறது என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. பொது இடங் களில்தான் தடை செய்யப்பட்டுள் ளன, ஓட்டல்களில் விற்கலாம் என டாடா காரணம் சொல்லலாம். இதே கேள்விதான் எல்ஐசி முதலீட்டுக்கும். சட்டபூர்வமாகவே நீண்ட காலமாக நடந்து வரும் தொழிலில் முதலீடு செய்வது சட்டத்துக்கு புறம்பானதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x