Published : 18 Feb 2014 07:12 PM
Last Updated : 18 Feb 2014 07:12 PM

வாழ்வில் முன்னேற்றம் தரும் பொருளாதார மேற்படிப்புகள்

பி.ஏ. பொருளாதாரத்தை பலரும் இரண்டாம்தர படிப்பாக எண்ணுகின்றனர். அது தவறு. பொருளாதாரத்தில் திட்டமிட்டு சிறப்பான மேற்படிப்புகளை படித்தால் வளமான எதிர்காலத்தை அடையலாம். எம்.ஏ. பொருளாதாரம், எம்.எஸ்சி. பொருளாதாரம் ஆகிய படிப்புகள் மூலம் பொருளாதார நிபுணர் ஆகலாம்.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி. ஜெனரல் எகனாமிக்ஸ், பைனான்சியல் எகனாமிக்ஸ், அப்ளைடு குவான்டிடிவ் பைனான்ஸ், என்வைரான்மென்ட் எகனாமிக்ஸ் உள்ளிட்ட மேற்படிப்புகள் உள்ளன. இப்படிப்பில் சேர 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் எம்.ஏ. இன் பிசினஸ் எகனாமிக்ஸ், ரூரல் எகனாமிக்ஸ், எம்.எஸ்சி. குவான்டிடிவ் எகனாமிக்ஸ், எம்.ஏ. பைனான்சியல் எகனாமிக்ஸ் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.

பொருளாதாரத்தில் சிறப்பு பாடப் பிரிவுகளாக இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ், டிரேட் எகனாமிக்ஸ், மைக்ரோ எகனாமிக்ஸ், லேபர் எகனாமிக்ஸ், டெவலப்மென்ட் எகனாமிக்ஸ், மேத்தமெடிக்ஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்டவை படிக்கலாம். வெளிநாடுகளில் பணியாற்ற விரும்புவோர் எம்.ஏ. இன் வேர்ல்டு எகனாமிக்ஸ் பாடப் பிரிவை படிக்கலாம்.

டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம், டெல்லி ஸ்டீஃபன் கல்லூரி, பெங்களூர்

கிறைஸ்ட் பல்கலைக்கழகம், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அநேக புதுமையான பொருளாதார மேற்படிப்புகள் உள்ளன. கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் மாஸ்டர் ஆப் பிசினஸ் எகனாமிக்ஸ் என்ற பாடத் திட்டம் உள்ளது. மேற்கண்ட படிப்புகளைப் படிப்பவர்களுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஐ.ஏ.எஸ். தேர்வுபோல, பொருளாதாரத்திலும் ஆண்டுக்கு ஒருமுறை ஐ.இ.எஸ். (Indian Economics Service) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு 3 நாட்கள் நடக்கும். எழுத்து தேர்வுக்கு 1000 மதிப்பெண், நேர்முக தேர்வுக்கு 200 மதிப்பெண் வழங்கப்படுகிறது. வரும் மே 24-ம் தேதி தேர்வு நடக்கிறது.

அதற்கு மார்ச் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை யூ.பி.எஸ்.சி. இணையதளத்தில் பெறலாம். தேர்வு எழுத வயது வரம்பு 21 - 30. இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதால் அப்பிரிவினர் உடனடியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நல்ல வாய்ப்பு இது. தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுபவர்களுக்கு நிதித்துறை சார்ந்த அரசுத் துறைகளில் பெரும் பதவிகள் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x