

போலீஸ் வேலை
மத்திய ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எஃப்) அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் ஸ்டெனோ வேலைக்கு 271 காலியிடங்கள் உள்ளன. ஆண், பெண் இரு பாலினரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி பிளஸ் டூ. அத்துடன் போலீஸ் வேலைக்கான உயரம், மார்பளவு, எடை ஆகியவற்றில் குறிப்பிட்ட தகுதிகள் தேவை. 18 வயது முதல் 25 வயது உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். திறனறித் தேர்வுதான் இதில் முக்கியமானது. 10 நிமிடத்தில் 80 வார்த்தைகளைத் தட்டச்சு செய்யவும், கம்ப்யூட்டரில் டைப் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனைகளில் பங்கேற்க வேண்டும். இவற்றில் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 22. கூடுதல் தகவல்களுக்கு: www.crpf.gov.in
ராணுவத் தொழிற்சாலை வேலை
திருச்சியில் உள்ள ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் குரூப் சி பிரிவில் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பிற்படுத்தப் பட்டோர் பிரிவு 15, திறந்த நிலை பிரிவு 15. ஆக மொத்தம் 30. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இதற்குள் உள் இடஒதுக்கீடு உண்டு. வயது வரம்பு 18 முதல் 32 வரை. வயது வரம்பில் தளர்ச்சி உண்டு. கல்வித் தகுதி, பத்தாம் வகுப்பு. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 21. ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு: www.oftdr.com