

மத்திய அரசு வாரியத்தின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இந்தியா முழுவதும் உள்ளன. அவை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்குகின்றன. ‘சென்ட்ரல் ஸ்கூல்ஸ்’ என்ற பெயரில் 1963-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா என பிறகு பெயர் மாற்றப்பட்டன. இத்தகைய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ளன. இவற்றில் ஜலந்தரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகளும் நேர்முகத் தேர்வும்
பி.ஜி.டி. (PGT): முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பிரிவில் பொருளாதாரம், புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 28 அன்று நடத்தப்படும். கணிதம், உயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 29 அன்று நடத்தப்படும். இந்தி, கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 30 அன்று நடத்தப்படும்.
டி.ஜி.டி.(TGT): பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பிரிவில் சமூக அறிவியல் பாடப் பிரிவுக்கு மார்ச் 28 அன்று, கணிதம், உயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மார்ச் 29 அன்று, இந்தி, பஞ்சாபி ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மார்ச் 30 அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
பிரைமரி டீச்சர் பிரிவுக்கு மார்ச் 29 அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
பலவகை பிரிவில் கம்ப்யூட்டர் பயிற்சியாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வு மார்ச் 30 அன்று நடத்தப்படும்.
பலவகைப் பிரிவில் (miscellaneous) விளையாட்டு பயிற்சியாளர் (கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, தடகளம்), யோகா ஆசிரியர், நடனம் மற்றும் கைவினை பயிற்றுநர், ஆலோசகர், மருத்துவர், செவிலியர் பதவிகளுக்கு ஏப்ரல் 3 அன்று நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி உடைய மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி: உங்களுடைய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மற்றும் நேர்முகத் தேர்வுக்கு வர வேண்டிய முகவரி, Kendriya Vidyalaya Suranussi, GT Road Suranussi, Jalandhar 144027.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 24 மார்ச் 2017