Published : 13 Jun 2016 11:02 AM
Last Updated : 13 Jun 2016 11:02 AM

வெற்றி மொழி: பிலைஸ் பாஸ்கல்

1623 ஆம் ஆண்டு முதல் 1662 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பிலைஸ் பாஸ்கல் பிரெஞ்சு தத்துவஞானி. மேலும் கணிதவியலாளர், இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் எழுத்தாளரும் கூட. நிகழ்தகவின் நவீன கோட்பாடுகளுக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த பெருமை இவருக்குண்டு.

கணிதத் துறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவராக கருதப்படுகிறார். இவரது கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் இயற்பியல், வடிவியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக அமைந்துள்ளன. தனது இறுதி காலத்தை மதம் மற்றும் தத்துவப் பணிகளுக்காக பயன்படுத்திக்கொண்டார்.

# புரிந்து கொள்ள முடியாத காரணங்களை அன்பு தன்னகத்தே கொண்டுள்ளது.

# நீதி மற்றும் அதிகாரம் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்தே கிடைக்க வேண்டும்.

# வலிமை இல்லாத நீதி அதிகாரமற்றது; நீதி இல்லாத வலிமை கொடுமையானது.

# கற்பனையே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றது.

# வலிமை இல்லாத சட்டம், செயல்திறன் அற்றது.

# கடவுள் காரணங்களால் உணரப்படுவது இல்லை, இதயத்தாலேயே உணரப்படுகிறது.

# மனிதனுடைய உயர்வு அவனுடைய சிந்தனையின் ஆற்றலைப் பொறுத்தது.

# நண்பர் தனது முதுகுக்கு பின்னால் என்ன கூறுவார் என்பதை பரஸ்பரம் அறிந்து வைத்திருக்கும் நட்பு தொடர்ந்து வாழும்.

# நாம் ஒருபோதும் மனிதர்களை நேசிப்பதில்லை, ஆனால் அவர்களது பண்புகளை நேசிக்கிறோம்.

# அன்பான வார்த்தைகளுக்கான செலவு அதிகம் இல்லை, ஆனாலும் அவை சாதிப்பது அதிகம்.

# இரண்டு வகையான மனிதர்கள் மட்டுமே உள்ளனர்: தங்களை பாவிகளாக நினைக்கக்கூடிய நீதிமான்கள் மற்றும் தங்களை நீதிமான்களாக நினைக்கக்கூடிய பாவிகள்.

# நமது எண்ணங்களை ஆராய்ந்து பார்த்தால், அதில் எப்போதும் கடந்தகால மற்றும் எதிர்கால நினைவுகளே இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

# நீங்கள் பெற்றால், அனைத்தையும் பெறுகிறீர்கள்; நீங்கள் இழந்தால், எதையும் இழப்பதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x