Last Updated : 05 Jul, 2016 12:02 PM

 

Published : 05 Jul 2016 12:02 PM
Last Updated : 05 Jul 2016 12:02 PM

ஆங்கிலம் அறிவோமே - 117: எதைக் கொண்டு பல் துலக்குவீர்கள்?

ஆசை மற்றும் காதலுக்கான கடவுள் Cupid. காதல் தேவதையான வீனஸின் மகன் இவன். ஆடைகளற்ற சிறுவனாகக் கையில் வில் மற்றும் அம்புகளுடன், இறக்கைகளுடன் cupid என்ற சிறுவன் சித்தரிக்கப்படுகிறான்.

Playing Cupid என்றால் இருவருக்கிடையே காதல் உணர்வு உண்டாகத் தூண்டுதலாக இருப்பது என்று அர்த்தம். Are you playing Cupid with these two?

ஆனால் Cupidity என்பதற்கான அர்த்தம் வேறு. அது பேராசையைக் குறிக்கிறது. Cupidity என்பதற்கு எதிர்ச் சொற்களாக dislike, apathy, generocity போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

  

Nouns ஆக இருப்பதே adjectives ஆகச் செயல்பட வாய்ப்பு உண்டா என்று கேட்டால் உண்டு என்பதுதான் பதில். Tamil, race, tennis, book, collection போன்றவை nounsதானே?

ஆனால் கீழே உள்ளவற்றைப் படியுங்கள்.

1. Tamil teacher

2. Race course

3. Tennis Court

4. Book exhibition

5. Collection centre

இவற்றைப் பார்க்கும்போது teacher, course, court, exhibition, centre ஆகிய nounகளை விளக்கும் adjectives ஆக முதலில் நான் குறிப்பிட்ட nouns (tamil, race போன்றவை) விளங்குகின்றன.

  

இப்படி adjective ஆகச் செயல்படும் nouns-ஐப் பொறுத்தவரை சில விஷயங்களில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இந்த adjectives ஆன nouns எப்போதுமே nounக்கு முன்னால்தான் வரும்.

அதுவும் தவிர இதுபோன்ற adjectives பெரும்பாலும் ஒருமையில்தான் வரும். Boat race, Boat races இரண்டுமே சரி. ஆனால் Boats race, Boats races என்பது தவறு.

எதைக் கொண்டு பல் துலக்குவீர்கள்? Tooth பிரஷ்தான். அத்தனை பற்களையும் அந்த ஒரே பிரஷ்ஷைக் கொண்டு துலக்கினாலும் அது Teeth brush இல்லை.

சில விதிவிலக்குகளும் உண்டு. Accounts Department, Sports Club, Customs duty.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். சில nouns பன்மைபோலவே தோற்றமளித்தாலும் அவற்றை ஒருமையாகத்தான் பயன்படுத்துகிறோம். அதற்காக adjective ஆகச் செயல்படும் nouns-ஐ ஒருமையாக மாற்றக் கூடாது. A News Reporter என்பதுதான் சரி. News என்பதை இங்கு new என்று மாற்றினால் அர்த்தம் வேறாகிவிடும். அதேபோல A billiards tableதான்.

Adjectives ஆகச் செயல்படும் noun இடம் பெறும்போது இரண்டு வார்த்தைகளும் ஒன்றி ணையுமா? தனித்தனி வார்த்தைகளாகத்தான் இருக்குமா?

இரண்டும் இணைந்தும் ஒன்றாகலாம். (Bathroom). இரண்டும் தனித்தனி வார்த்தை களாகவும் இருக்கலாம். (Car door). மூன்றாவது பிரிவாகக்கூட இருக்கலாம். அதாவது இந்த இரண்டு வார்த்தைகளுக்கு மிடையே hyphen இருக்கலாம் (book-case).

  

ஒரு விளையாட்டு வீராங்கனையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘Hero’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் சரியா? அல்லது ஏதோ அவசரத்தில் தவறாக அச்சிட்டுவிட்டார்களா? என்பது ஒரு வாசகரின் சந்தேகம்.

நியூயார்க் டைம்ஸில் கூட “Aung San Suu Kyi should be one of the heroes of modern times” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Hero என்பது எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியம். ‘பிரபலமான, வியக்கத்தக்க நபர்’ என்ற அர்த்தத்தில் Hero என்ற வார்த்தை இரு பாலரையும் குறிக்கப் பயன்படுகிறது.

‘One of the heroes’ என்று மேலே குறிப்பிட்ட வாசகத்தில் ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தைச் சேர்ந்த, தைரியமான பிரபல நபர்களையும் heroes குறிக்கிறது.

என்றாலும் கதை அல்லது திரைப்படம் என்னும் கோணத்தில் வரும் முக்கிய ஆண் பாத்திரம் Hero என்றும், முக்கியப் பெண் பாத்திரம் Heroine என்றும் குறிக்கப்படுகிறது.

ஆனால் தமிழில் நாம் வில்லன், வில்லி என்றெல்லாம் குறிப்பிட்டுப் பழகிவிட்டோம். ஆங்கிலத்தைப் பொறுத்தவரை எதிர்மறைப் பாத்திரம் என்றால் (ஆணோ, பெண்ணோ) வில்லன்தான்.

Villi என்று எழுதினால் அதற்கு அர்த்தம் வேறு. அது Villus என்ற வார்த்தையின் பன்மை.

சிறு குடலின் உள்ளே ஒரு பாதுகாப்புப் படலம்போல இருக்கும், விரல்போல நீட்டிக் கொண்டிருக்கும் பகுதியைத்தான் Villus என்பார்கள்.

  

புத்தகங்கள் தொடர்பான சில வார்த்தைகளை அறிந்துகொள்வோமே.

Glossary என்றால் நூலில் உள்ள முக்கியமான வார்த்தைகளுக்கான விளக்கங்களை அளிக்கும் பட்டியல்.

Epitome என்றால் அந்த நூலின் சுருக்கம்.

Excerpt என்றால் நூலிலிருந்து எடுத்தாளப்படும் ஒரு பகுதி.

Catalogue அல்லது Bibliography என்றால் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களின் பட்டியலைக் குறிக்கிறது. ஓர் ஆராய்ச்சி நூல் என்றால் அதற்கு உதவிய நூல் மற்றும் ஆவணங்களின் பட்டியலையும் Bibliography என்பதுண்டு.

Encyclopaedia என்றால் அது பலவிதத் துறைகள் தொடர்பான வார்த்தைகள் குறித்த தகவல்களை அளிக்கும் நூல். இதில் அகர வரிசையில் வார்த்தைகள் இடம் பெறுகின்றன.

Erratum என்றால் அது அச்சுப் பிழைகளைக் குறிப்பது. நூல் முழுவதையுமே அச்சிட்ட பிறகு, அதிலுள்ள சில தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், கடைசி ஒரு தாளில் இன்னின்ன பக்கத்தில் இந்த இந்த அச்சுப் பிழைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இப்படி மாற்றிப் படிக்க வேண்டும் என்று பட்டியலிட்டு அந்தப் பட்டியலுக்கு Erratum என்று தலைப்பிடுவார்கள்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

என்ன புத்தகத்தை இலவசமாகத் தராங்களாம்?

முதல் புத்தகத்தின் erratum!

சிப்ஸ்

#

As if, As though ஆகிய இரண்டும் ஒன்றைத் தான் குறிக்கின்றனவா?

ஆமாம். உண்மையற்ற ஒன்று, கற்பனை, நடித்தல் போன்றவற்றை உள்ளடக்கியவை இவை. Do not behave as if you are very tired. I shal#cross examine you as though I am a Lawyer.

# Chauffeur என்றால்? (ஷாஃப்பர்)

காரோட்டி. இதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்.

# He has done many respectfu#deals என்பது சரியா?

He is respectfu #என்றால் அவர் மிகுந்த மரியாதை காட்டுகிறார் என்று அர்த்தம். He is respectable என்றால் அவர் மதிக்கத்தக்கவர் என்று அர்த்தம். எனவே He has done many respectable deals என்பதுதான் சரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x