வேலை வேண்டுமா: மத்திய அரசுப் பணி

வேலை வேண்டுமா: மத்திய அரசுப் பணி
Updated on
1 min read

மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் உதவியாளர் பதவியில் 984 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப இருக்கிறது. இப்பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

தேவையான தகுதி

மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின் படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு விதிகள்

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்ற 2 நிலைகள் உண்டு. எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.23 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். இப்பணியில் இருந்துகொண்டு துறைத் தேர்வெழுதி எளிதில் அதிகாரியாக பதவிஉயர்வும் பெறலாம். உரிய கல்வித் தகுதியும், வயதுத் தகுதியும் உடைய பட்டதாரிகள் மார்ச் 29-ம் தேதிக்குள் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தை (>www.newindia.co.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப முறை, எழுத்துத் தேர்வு, பாடத்திட்டம் உள்ளிட்ட இதர கூடுதல் விவரங்களை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

பணி: மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை

காலியிடங்கள்: 984

வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 29

முதல் நிலைத் தேர்வு - ஏப்ரல் 22, 23-ம் தேதியில் நடத்தப்படும். (உத்தேசமாக)

மெயின் தேர்வு - மே மாதம் 23-ம் தேதி நடைபெறும். (உத்தேசமாக)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in