சில துளிகள்: விரும்பினால் சொல்லிவிடுங்கள்!

சில துளிகள்: விரும்பினால் சொல்லிவிடுங்கள்!
Updated on
1 min read

இந்தியாவில் அதிக வருவாய் உள்ள வேலைகள் என்னென்ன?

இந்தியாவில் பொதுவாக அதிக சம்பளம் வாங்குபவர்கள் ஆசிரியர்கள்தான். ஐ.ஏ.எஸ்., ஐ.இ.எஸ்., ஏ.எப்.சி.ஏ.டி., எஸ்.எஸ்.பி. போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள்தான் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள். அரசு உயர்பணியைத் துறந்துவிட்டு இதுபோன்ற தேர்வுப் பயிற்சிகளுக்கு ஆசிரியர்களாகச் செல்பவர்கள் இருக்கின்றனர். ஆண்டுக்கு இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கும் பயிற்சி ஆசிரியர்களும் உண்டு. பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இதுபோன்ற பயிற்சி ஆசிரியர்களாக அதிக சம்பளம் வாங்குகின்றனர். அத்துடன் சி.ஏ. படித்த ஆடிட்டர்களும் ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் வரை சம்பளம் வாங்குகின்றனர். அறுவை சிகிச்சை நிபுணர்கள், திரைப்பட நடிகர்கள், கட்டிடவியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மென்பொருள் வடிவமைப்பாளர்களும் அதிக சம்பளம் வாங்குகின்றனர்.

ஒருவர் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த டிப்ஸ்?

# வாழ்க்கையில் அவ்வப்போது, பணம் உள்ளிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு வேலையைச் செய்யுங்கள்.

# கடைத் தெருவில் சோட்டா பீம், டோனால்ட் டக் போன்ற கதாபாத்திரங்களாக வேடமிட்டு நம்மை மகிழ்விக்கும் உருவங்களுக்குள் இருப்பவர்கள் மனிதர்கள்தான் என்று ஒருபோதும் குழந்தையிடம் சொல்ல வேண்டாம்.

# நல்ல மனிதனாக ஆவதற்கு ஒரு மோசமான அனுபவம் நேரும் வரை காத்திருக்க வேண்டாம்.

# நீங்கள் பெண்ணாக இருந்தால், ஒருவரை நீங்கள் விரும்பினால் அதைச் சொல்லிவிடுங்கள். உங்களது குறிப்புணர்த்தல்கள் அவருக்குத் தெரியவில்லையெனில் நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.

# நீங்கள் ஆணாக இருந்தால் உங்களுடைய தோழிகளுக்கு அறிவுரை சொல்வதற்கு பதிலாக உங்களுடைய கருத்தை உணர்த்துங்கள். அவர்கள் பேசுவதற்கு நீங்கள் காதுகொடுப்பதையே அதிகம் விரும்புவார்கள்.

# ஒரு பெரிய யோசனை உங்களை ஆட்கொண்டாலோ, ஒரு விசித்திரமான செய்கையைச் செய்ய விரும்பினாலோ, அல்பமான சேட்டை செய்யத் தோன்றினாலோ, உங்கள் உணர்வைத் திருப்திப்படுத்த அதை உடனேயே செய்துவிடுங்கள். உங்கள் இதயம் சொல்வதை அவ்வப்போது கேளுங்கள். புதிதாகச் செய்யுங்கள். வேடிக்கையாகச் செய்யுங்கள். பிரம்மாண்டமாகச் செய்யுங்கள். தப்போ சரியோ அதை நீங்கள் செய்ததற்காகப் பிறகு உங்களது மனம் திருப்திகொள்ளும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in