Published : 03 Apr 2017 10:15 AM
Last Updated : 03 Apr 2017 10:15 AM

வாகன புகை மாசை கட்டுப்படுத்த வழிகாட்டும் பாரீஸ், லண்டன் மேயர்கள்

வாகன புகை மாசு என்று உலக நாடுகளில் பெரும் பிரச்சினை யாக உருவெடுத்திருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என்றெல்லாம் விதி விலக்கின்றி அனைத்து நாடுகளுமே இதற்குத் தீர்வு காண்பதில் தீவிரம் காட்டுகின்றன.

ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத் தினரும் இதற்கு தங்களால் இயன்ற வகையில் தீர்வு காண முயல்கின்றனர்.

இதில் முதல்கட்டமாக பாரீஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த மேயர்கள் முன் னோடி முயற்சியில் இறங்கியுள்ளனர்.

வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை உடனுக்குடன் சோதிப்பதன் மூலம் காற்றின் தூய்மையை மேம்படுத்த முடியும் என நம்புகின்றனர்.

பாரீஸ் மேயர் ஆனி ஹிடால்கோ, லண்டன் மேயர் சாதிக் கான் ஆகியோர் வாகன புகையை சோதித்து அளவிட புதிய முறையைக் கையாண்டுள்ளனர்.

இதன்படி அனைத்து கார் உரிமை யாளர்களுக்கும் ஒரு அட்டை தரப்பட் டுள்ளது. அதில் அவர்களது வாகனம் வெளியிடும் புகையின் அளவு குறிக்கப் படும். இதன் மூலம் எந்த வாகனம் அதிக அளவில் புகையை வெளியிடுகிறது என்பதை கண்டறிய முடியும்.

வாகனங்கள் சாலைகளில் செல்லும் போது அது எந்த அளவு புகையை வெளியிடுகிறது என்பதைக் கண்டறிய முடியும்.

பசுமையான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சில் (ஐசிசிடி) இந்த சோதனையை மேற்கொள்ளும். சாலை களில் வாகனங்கள் செல்லும்போது அதன் புகை அளவை சோதிப்பதன் மூலம் அதன் உண்மையான புகை வெளியிடும் அளவு பதிவாகும் என இரு நகர மேயர்களும் கருதுகின்றனர்.

இதன் மூலம் காரின் கண்ணாடியை மறைக்கும் புகையை வெளியிடும் வாகனங்கள் சாலைகளில் ஓடுவது குறையும். அளவீட்டுப் பணியில் தனியார் அமைப்புகள் ஈடுபடும்.

சர்வதேச அளவில் புகை மாசில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் செய்த மோசடி உலகையே பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்நிறுவனம் கார் வெளியிடும் புகை மாசைக் கண்டறியும் கருவியிலேயே தில்லுமுல்லு செய்திருந் தது. ஆனால் அது சாலையில் ஓடும் போதுதான் வெளியிடும் மாசின் அளவு குறிப்பிட்டிருந்த அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இரு மேயர்கள் மேற்கொண் டுள்ள சாலையில் சோதிக்கும் முயற்சி இதுபோன்ற தில்லுமுல்லுகளைத் தடுக்கவும் உதவும் என நம்பலாம்.

லண்டனில் ஆண்டுதோறும் 9,500 பேர் புகை மாசு காரணமாக உயிரிழக் கின்றனர். பாரீஸில் இந்த எண்ணிக்கை 2,500 ஆக உள்ளது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு இரு மேயர்களும் எடுத்துள்ள முன் னோடி முயற்சியை பிற நாடுகளின் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் பின் பற்றலாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x