

70. அண்மையில் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
a) எச்.எல்.தத்து b) ஆர்.எம்.லோதா
c) பி.சதாசிவம் d) டி.எஸ்.தாக்கூர்
71. 1964-ல் ஊழலை தடுப்பதற்கு சந்தானம் குழுவின் பரிந்துரையால் உருவாக்கப்பட்ட அமைப்பு
a) சிபிஐ b) சிவிசி
c) லோக்பால் d) லோக் ஆயுக்தா
72. கீழ்க்கண்டவற்றில் எது சரி?
a) இந்திய அரசியலமைப்பை திருத்தும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது
b) இந்திய அரசியலமைப்பை திருத்த அரசியலமைப்பு திருத்தக்குழு உள்ளது
c) மாநில அரசு, அரசியலமைப்பை திருத்த தொடக்கத்தை கொண்டுவரலாம்
d) அடிப்படை உரிமைகளை சட்டத்திருத்தம் மூலம் மாற்ற முடியாது
73. தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்கள வைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
a) 6 b) 12 c) 18 d) 24
74. கேபினட் செயலாளர் பதவி இந்தியாவில் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
a) 1950 b) 1952 c) 1954 d) 1956
75. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது
a) 18 b) 21 c) 25 d) 30
76. பண மசோதாவுக்கு எத்தனை நாட்களுக்குள் மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்க வேண்டும்?
a) 7 நாட்கள் b) 14 நாட்கள்
c) 21 நாட்கள் d) 28 நாட்கள்
77. இந்திய அரசியலமைப்பில் எஞ்சிய அதிகாரம் யாரிடம் உள்ளது?
a) மத்திய அரசு b) மாநில அரசு
c) நீதித்துறை d) இவை எதுவுமில்லை
78. அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்?
a) மக்களவை b) மாநிலங்களவை
c) மக்களவை அல்லது மாநிலங்களவை
d) இவை ஏதுமில்லை
79. பின்வருவனவற்றுள் எது இந்திய அரசியலமைப்பிலிருந்து வேறுபட்டுள்ளது?
a) கூட்டாட்சி அரசாங்கம்
b) பாராளுமன்ற அரசாங்கம்
c) ஜனாதிபதி அரசாங்கம்
d) சுதந்திரமான நீதித்துறை
80. பாராளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய குழு
a) விதிகள் குழு b) மதிப்பீட்டுக்குழு
c) பொதுத்துறை குழு d) பொது கணக்கு குழு
81. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கட்டாய கல்வி வழங்கும் சட்டம் இடம்பெற்றுள்ள ஷரத்து
a) ஷரத்து 21 b) ஷரத்து 21-ஏ
c) ஷரத்து 25 d) ஷரத்து 45
82. பஞ்சாயத்து ராஜில் உள்ள சிறிய நிர்வாக அமைப்பு
a) கிராம சபை b) பஞ்சாயத்து சமிதி
c) ஜில்லா பரிஷத் d) நகராட்சி
83. மாநில அமைச்சரவை இடம்பெற்றுள்ள ஷரத்து
a) 163 b) 174 c) 180 d) 234
84. மது மற்றும் போதைப்பொருள் பற்றி அரசியலமைப்பில் எந்த ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
a) ஷரத்து 47 b) ஷரத்து 21
c) ஷரத்து 40 d) ஷரத்து 45
85. இந்திய அரசியலமைப்பில் எந்த அடிப்படை உரிமைகளில் தீண்டாமை பற்றி கூறப்பட்டுள்ளது?
a) சுதந்திரத்துக்கான உரிமை
b) சமத்துவத்துக்கான உரிமை
c) சுரண்டலுக்கு எதிரான உரிமை
d) சமய சுதந்திரத்துக்கான உரிமை
86. அரசியலமைப்பு சட்டம், நிர்வாக அதிகாரத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளது?
a) ஜனாதிபதி b) பாராளுமன்றம்
c) பிரதமர் d) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம்
87. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்
a) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
b) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
c) 4 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
d) 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
88. மாநில சட்டமன்றத்தின் மேலவையை நீக்கவோ அல்லது உருவாக்கவோ அதிகாரம் பெற்றிருப்பவர்
a) ஜனாதிபதி b) பாராளுமன்றம்
c) மாநில சட்டமன்றம் d) ஆளுநர்
89. இரட்டை குடியுரிமை எங்கு நடைமுறையில் இருக்கிறது?
a) அமெரிக்கா b) பிரான்ஸ்
c) இந்தியா d) இங்கிலாந்து
90. ராஜ்ய சபாவின் தலைவர் யார்?
a) ஜனாதிபதி b) துணை ஜனாதிபதி
c) பிரதமர் d) ஆளுநர்
91. நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றி அரசியலமைப்பில் எந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?
a) ஷரத்து 323 b) ஷரத்து 323-ஏ
c) ஷரத்து 323-பி d) ஷரத்து 321
92. இந்திய அரசியலமைப்பு தினம்
a) நவம்பர் 26 b) ஜனவரி 26
c) அக்டோபர் 2 d) நவம்பர் 14
93. இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர்
a) ஜி.வி.மவ்லங்கார் b) நர்காரி ராவ்
c) சுகுமார் சென் d) யாருமில்லை
94. முதல்முறையாக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட கல்வித்தகுதியை நிர் ணயித்த மாநிலம்
a) ஆந்திரா b) ராஜஸ்தான்
c) மேற்கு வங்காளம் d) மகாராஷ்டிரா
95. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாராளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு
a) தொகுதி சீரமைப்பு ஆணையம்
b) தேர்தல் ஆணையம்
c) கேபினட் செயலாளர்
d) மேற்கண்ட எதுவுமில்லை
96. இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் முறை எந்த மாநிலத்தில் முதல்முறையாக ஏற்படுத்தப்பட்டது?
a) ஆந்திரா b) ராஜஸ்தான்
c) மகாராஷ்டிரா d) தமிழ்நாடு
97. அடிப்படை உரிமையிலிருந்து சொத் துரிமை நீக்கப்பட்டது எந்த சட்டத் திருத்தத்தின் மூலம்?
a) 24-வது சட்டத்திருத்தம் b) 42-வது திருத்தம்
c) 44 -வது திருத்தம் d) 92-வது திருத்தம்
98. மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று அண்ணா பெயர் மாற்றம் செய்த ஆண்டு
a) 1947 b) 1957 c) 1969 d) 1992
99. மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர் யார்?
a) தலைவர் b)ஆணையர்
c) மேயர் d) மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
100. உள்ளாட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்
a) கர்சன் பிரபு b) வெல்லெஸ்லி பிரபு c) ரிப்பன் பிரபு d) டல்ஹவுசி பிரபு
விடைகள்: 70.d 71.b 72.a 73.c 74.a 75.b 76.b 77.a 78.c 79.c 80.b 81.b 82.a 83.a 84.a 85.b 86.a 87.d 88.b 89.a 90.b 91.b 92.a 93.c 94.b 95.a 96.b 97.c 98.c 99.c 100.c
அறிவியல்
அறிவியலில் 4 பகுதிகள் உள்ளன. 1. இயற்பியல், 2. வேதியியல், 3. தாவரவியல், 4. விலங்கியல்.
இயற்பியலில் பேரண்டம் தலைப்பில் சூரிய குடும்பம், விண்மீன், வால் நட்சத்திரம், வானியல் அலகு, ஒளி ஆண்டு போன்ற பகுதியில் இருந்து கேள்விகள் வரலாம்.
அளவீடுகள் தலைப்பில் அடிப்படை அளவுகள், வழி அளவுகள், நிறை எடை வேறுபாடு, CGS, MKS முறை, MLT பரிமாணம், வெப்பம், வெப்பநிலை வேறுபாடு, மின்னோட்டம், மின்னூட்டம், மின்னழுத்தம், குதிரை திறன் போன்ற பகுதியில் இருந்து கேள்விகள் வரலாம்.
விசை தலைப்பில் விசைக்கான நியூட் டன் விதிகள், விசைக்கும் அழுத்தத் திற்கும் உள்ள தொடர்பு, பாஸ்கல் விதி போன்ற பகுதிகள் முக்கியமானவை.
இயக்கவியல் தலைப்பில் இயக்கங் களின் வகைகள், நேர்கோட்டு இயக்கம், வட்ட இயக்கம், சீரலைவு இயக்கம், போன்ற பகுதிகளில் இருந்தும், நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் பற்றியும், நேர் கோட்டு இயக்கத்திற்கும் வட்ட இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு போன்றவை கேள்வியாக கேட்கப்படலாம்.
வேதியியல் தலைப்பில் தனிமம், சேர்மம், கலவை தலைப்பில் தனிம அட்டவணை, தனிமங்களின் குறியீடுகள், புதியதாக சேர்க்கப்பட்ட தனிமங்கள், தனிமம், சேர்மம் மற்றும் கலவையின் பண்புகள் போன்ற பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படலாம்.
அமிலம், காரம், உப்பு தலைப்பில் அமிலத்தின் வகைகள், pH மதிப்பு, காரங் களுக்கான உதாரணம், நடுநிலையாக்கள் வினை போன்ற பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படலாம். நடப்பு நிகழ்வில் சில தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகள் கேள்விகளாக கேட்கப்படலாம்.
தொகுப்பு: கணேச சுப்பிரமணியன் | கணேஷ் ஐஏஎஸ் அகாடமி