Last Updated : 11 Feb, 2017 09:41 AM

 

Published : 11 Feb 2017 09:41 AM
Last Updated : 11 Feb 2017 09:41 AM

அழகு அலமாரிகள்

அலமாரிகள் உலகமெங்கும் பல்லாண்டுக் காலமாகப் புழக்கத்தில் இருந்துவருகிறது. ஆனால் தொடக்க காலத்தில் அலமாரி ஓர் ஆபரணப் பொருளாக இருந்தது. அரசர்கள், பிரபுக்கள், வர்த்தகர்கள் போன்ற உயர் வகுப்பினர்தான் பயன்படுத்தி வந்தனர். ஆபரணங்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படும் பெட்டி போன்ற வடிவில் ஆரம்பத்தில் ஆடைகள், கோப்புகள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதன் பிறகுதான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அலமாரிக்கான முன்மாதிரி உருவாக்கப்பட்டது.

19-ம் நூற்றாண்டு வாக்கில் அமெரிக்காவில் நவீன வடிவ அலமாரிகள் உருவாக்கப்பட்டன. தொடக்க காலத்தில் அலமாரிகள் பெரும்பாலும் மரத்தால் ஆனவையாக இருந்தன. அதன் பிறகு தகரத்தாலும் உருவாக்கப்பட்டன. இந்தத் தகர அலமாரி பயன்பாட்டுக்கு வந்த பிறகு பல்வேறு தரப்பு மக்களுக்கு அலமாரியைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் எனலாம். இன்றைக்கு வீட்டின் அமைப்பு, கருப் பொருள் போன்ற பல அம்சங்களை வைத்து அலமாரிகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுள் சில வகை:

நின்ற நிலையிலுள்ள அலமாரி

இந்த வகை அலமாரி பழமையானது. பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் இந்த வகை அலமாரிதான். இவை மரம், இரும்பு போன்ற பொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும் ஆடைகள், ஆபரணங்கள் வைக்கப்பயன்படுகிறது.

அர்மொர் அலமாரி

இது மிகக் குட்டையான அலமாரியாகும். இந்த வகை அலமாரிகள் பெரும்பாலும் மரத்தால் செய்யப்படுபவை. இவை தொடக்க காலத்தில் ஆடைகள் வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. இப்போது வரவேற்பறைகளில் புத்தகங்கள், அழகுப் பொருள்கள் வைக்கப்பயன்படுகிறது. இந்த வகை அலமாரி பிரான்ஸில் வடிவமைக்கபட்டது.

வாக்-இன் அலமாரி

இந்த வகை அலமாரி துணிக் கடைகள் மாதிரியான இடங்களில் பயன்படுத்தப்படுவது. அறையைச் சுற்றி இந்த வகை அலமாரி உருவாக்கப்பட்டிருக்கும். தங்கள் வாங்கிய ஆடைகளை, பொருள்களை அழகாகக் காட்சிப் படுத்த இந்த வகை அலமாரி ஏற்றது.

கருப்பொருள்

இன்றைக்கு உள் அலங்காரம் என்பது வீட்டு வடிவமைப்பில் முக்கியமான அம்சமாக இருக்கிறது. அதாவது ஒரு கருப்பொருளை மையப்படுத்தி வீடு உருவாக்கப்படுவது வழக்கத்தில் இருக்கிறது. அந்த அடிப்படையில் அந்த அறையின் அலமாரிகளையும் அதே கருப்பொருளில் வடிவமைக்கிறார்கள்.

பக்கவாட்டில் திறக்கும் அலமாரி

வீட்டுக் கதவு போன்று வெளிப்பக்கமாகத் திறக்கக்கூடிய கதவைக் கொண்டவை அலமாரிகள். இந்த வகை அலமாரிகள் பக்கவாட்டில் திறக்கும்படி அமைக்கப்படுகிறது. இதனால் இதில் கூடுதல் இட வசதி கிடைக்கும்.

சுவர் அலமாரி

இதுவும் உள் அலங்காரத்துடன் சேர்ந்து அமைக்கக்கூடியது. சுவருடன் சேர்த்து அமைக்கப்படுவதால் இட வசதியுடன் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x