Published : 04 Apr 2014 01:29 PM
Last Updated : 04 Apr 2014 01:29 PM

அந்த நாள் ஞாபகம்: அமெரிக்காவில் ஒரு பெண் மேயரான நாள்

1887, ஏப்ரல் 4

சுசானா எம் சால்டர் (1860-1961) எனும் பெண் அமெரிக்காவின் ஒரு நகரமான அர்கோனியாவின் மேயராக ஆன நாள் இன்று.

அவர் அமெரிக்காவின் முதல் பெண் மேயர் மட்டும் அல்ல. அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரசுப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணும் அவர் அதற்கு முன்னால் எந்த ஒரு பெண்ணும் அவ்வாறு தேர்வு செய்யப்பட வில்லை.

அவரது பெற்றோருடன் 12 வயதில் அவர் அந்த நகருக்கு குடி போனார். 20 வயதில் அங்கிருந்த விவசாய கல்லூரிக்கு போனார். உடல் நலமின்மையால் படிப்பை முடிக்கவில்லை.ஆனால் தன்னோடு உடன் படித்த சால்டரை காதலித்தார்.அவரை மணம் முடித்தார். திருமணத்துக்கு பிறகு மது விலக்குக்கான கட்சியில் அவர் செயல்பட்டார்.

இந்த காலகட்டத்தில் அவர்களது ஊருக்கு நகர அந்தஸ்து தரப்பட்டது.அப்போது அவரது தந்தை நகரத்தின் முதல் மேயராகவும் அவரது கணவர் நகரின் அரசு செயலராகவும் தேர்வாகினர். அவரது தந்தைக்கு பிறகு சுசானா நகர மேயர் ஆனார்.அவரது தேர்வு உலக அளவிலான செய்தியாகவும் பலவித கருத்து விவாதங்களை எழுப்பக்கூடியதாகவும் இருந்தது. பெட்டிகோட் நிர்வாகம் என கிண்டல் பிறந்தது.

ஒரு டாலர் அவருக்கு சம்பளமாக தரப்பட்டது. அவருக்கு ஒதுக்கப்பட்ட மேயருக்கான வீடு 1971ல் வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது கணவரின் வக்கீல் பணிகளுக்கும் ஹெட்லைட் எனும் பத்திரிகை ஆரம்பிக்கவும் ஒக்லஹோமா எனும் நகருக்கு மாறினர். 1916ல் கணவர் இறந்தார். 101 வயதில் சுசானா மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x