

பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 100 கிராஜூவேட் எக்சிகியூடிவ் பயிற்சி டிரெயினி (Graduate Executive Trainee) பணியிடங்கள் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1.12.2016 தேதியன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு ரூ.16,400 முதல் 40,500 வரை ஊதியம் வழங்கப்படும்
பணி விவரங்கள்
துறை: மெக்கானிக்கல், காலியிடம்: 50
கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- மெக்கானிக்கல்.
துறை: எலக்ட்ரிக்கல், காலியிடம்: 15
கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்.
துறை: எலக்ட்ரானிக்ஸ், காலியிடம்:5
கல்வித்தகுதி: பி.இ. / பி,டெக். - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்.
துறை: சிவில், காலியிடம்: 10
கல்வித்தகுதி: பி.இ. / பி,டெக். -சிவில் / சிவில் மற்றும் ஸ்டிரக்சுரல் இன்ஜினியரிங்.
துறை: கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ரு மென்டேஷன், காலியிடம்: 5
கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக். - இன்ஸ்ட்ருமென்டேஷன் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் / இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங்.
துறை: மைனிங், காலியிடம்: 10,
கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக்.- மைனிங் இன்ஜினியரிங்.
துறை: கம்ப்யூட்டர், காலியிடம்:5
கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக். - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் / இன்பர்மேஷன் டெக்னாலஜி.
தேர்ந்தெடுக்கப்படும்முறை: இந்த ஆண்டு நடைபெறவுள்ள கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்தி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பட்டியல் பிரிவினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணத்தில் விலக்களிக்கப் படுகிறது. விண்ணப்பத்தில் கேட் பதிவு எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 6.1.2017 முதல் 31.01.2017 வரை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:>www.nlcindia.com
தொடர்பு கொள்ள: 04142 -255135. இந்த உதவி எண்ணைக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைநாட்களில் அழைக்கலாம்.