ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு; இணையத்தில் காண...

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு; இணையத்தில் காண...
Updated on
1 min read

ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை, ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் எழுதினார்கள்.

இந்த நிலையில், இந்த தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டது.

முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான >www.trb.tn.nic.in இதில் பார்க்கலாம். இந்தத் தேர்வில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in