Last Updated : 23 Aug, 2016 11:05 AM

 

Published : 23 Aug 2016 11:05 AM
Last Updated : 23 Aug 2016 11:05 AM

ஆங்கிலம் அறிவோமே - 124: 2016 கி.மு. முதல் கி.பி. 2016 வரை

ஒருவரை உங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்வதை ‘Under my wing’ என்பார்கள். நீங்கள் ஒரு குழுவின் தலைவர் என்றால் உங்களுக்குக் கீழ் சிலர் பணிபுரிகிறார்கள். அவர்களுக்குப் பணி தொடர்பான விஷயங்களையும் நீங்கள் சொல்லிக்கொடுக்கிறீர்கள். அவர்களின் சந்தேகங்களையும் சங்கடங்களையும் போக்குகிறீர்கள் என்றால் they are under your wing என்று சொல்லலாம்.

‘I am under the gun’ என்றால்? பணியை முடிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. கொஞ்சம்கூட ஓய்வில்லாமல் ஒன்றில் ஈடுபட்டாக வேண்டுமென்றால் அப்படிக் கூறலாம்.

‘Under the weather’ என்றால் உடல் நலம் சரியில்லாமல் இருப்பது. கப்பலில் செல்லும்போது காய்ச்சலும், குமட்டல் உணர்வும் ஏற்பட்டால் கப்பலின் கீழ்ப் பகுதிக்குப் போகச் சொல்வார்கள். அங்கு கப்பலின் ஆட்டம் குறைவாக இருப்பதால் உடல் சீக்கிரம் குணமாகும்.

கீழே உள்ள வார்த்தைகளில் எவையெல்லாம் சரியானவை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

1.Tution 2.Lamblasted 3.Momento 4.In another words. 5.Abolishment. 6.Vocal chords 7.aquire 8.Dialate. 9.Exuberant price. 10.Heart rendering.

Possible என்பதற்கும் probable என்பதற்கும் என்ன வேறுபாடு என்பதைப் பார்ப்போம். Possible என்றால் சாத்தியம் இருப்பது என்று அர்த்தம். Probable என்றால் அது நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று அர்த்தம். நாம் தெருவில் இரண்டு கால்களால் நடக்காமல், குழந்தையைப் போலத் தவழ்ந்து செல்வது possible. ஆனால், probable அல்ல. Contact me as soon as possible. This is the shortest possible route.

Probable என்பது கிட்டத்தட்ட நடக்கக்கூடிய ஒரு விஷயம். The probable consequences of his action.

*****

சென்ற வாரம் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள் இவை.

1.வலிகள் - PAINS- SPAIN, 2.ஆட்சிசெய்தல் - REIGN- NIGER,

3.விமானம் - PLANE- NEPAL, 4.வெறிவிலங்குக்கடி நோய் - RABIES- SERBIA,

5.கூட - ALSO- LAOS, 6.கடலுக்குள் - INTO SEA- ESTONIA,

7.கட்டாயம் திட்டமிடு - DO PLAN- POLAND, 8.பரிசுத்தமான- PURE- PERU,

9.தொடர்கதை- SERIAL- ISRAEL, 10.ஒன்றுமில்லை அன்பே- NIL, DEAR- IRELAND

Paradigm என்றால் என்ன? சரியான உதாரணம்.His life is a paradigm of selfishness.

Paragon என்றால் என்ன? சிறப்பான உதாரணம். She is a paragon of love.

இரண்டும் ஒன்று போலவே இருக்கிறதே என்கிறீர்களா? Paragon என்பதை மனிதர்களுக்கும், Paradigm என்பதை உயிரற்ற பொருள்களுக்கும் பயன்படுத்துவார்கள்.

கி.மு. என்பதை B.C. என்கிறோம் அல்லது Before Christ. இவை ஆங்கில வார்த்தைகள். கி.பி.யை A.D. என்கிறோம். இவை Anno Domini. இவை லத்தீன் வார்த்தைகள். ஏன் இந்த வேறுபாடு? அதாவது ஒன்றை ஆங்கிலத்திலும், மற்றொன்றை லத்தீனிலும் ஏன் பயன்படுத்த வேண்டும்?

இதற்கான தெளிவான விடை இல்லை. ஆனால் இவற்றைப் பயன்படுத்தும்போது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். B.C. என்பது வருடத்துக்குப் பிறகு குறிப்பிடப்பட வேண்டும். A.D. என்பது வருடத்துக்கு முன்னால் குறிப்பிடப்பட வேண்டும். 500 B.C., A.D. 2010.

இந்தப் பகுதியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பத்து வார்த்தைகளுமே தவறானவை. எப்படி என்று பார்ப்போம்.

டியூஷன் என்பதில் ‘i’ விடுபட்டிருக்கிறது. Tuition என்பதே சரி.

Lamblasted என்பது சரியல்ல. Lambasted என்பதே சரி.

11.நினைவுப் பரிசாகக் கொடுக்கும் பொருள் Memento. Momento என்பது தவறு.

In another words என்பது தவறு. In other words என்பதே சரி.

Abolishment கிடையாது. Abolition என்பதே பொருத்தமான சொல் (சில அகராதிகளில் abolishment என்ற வார்த்தை காணப்படுகிறது என்றாலும்).

Vocal cords என்பதே சரி. (chords அல்ல).

Aquire என்பது தவறு. அது acquire என்று இருந்திருக்க வேண்டும்.

Dialate என்பது சரியல்ல. Dilate என்பதுதான் சரி.

Exuberant price என்பது சரியல்ல. (Exuberant என்றால் உற்சாகமான என்று பொருள்). மிக அதிகமான விலை என்றால் exorbitant என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

தமிழ்ப் படங்கள்ல மீசை முறுக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டுக் கன்னத்திலே மருவ வச்சு கிட்டு கையக் கட்டிகிட்டு கபாலின்னு கூப்பிடும் ஆள்தான் பாஸ்னு நினைச்சியா?

… பாஸ்டா!

#Boss என்பவர் யார்?

#குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் இடங்களை creche என்கிறோம். அந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது?

பலரும் கிரீச் என்கிறார்கள். அது தவறு. கிரஷ் என்பதே சரி.

#Avenue என்றால்?

இருபுறமும் மரங்கள் உள்ள சாலை, நிழற்சாலை.

இந்தத் தெருவின் பெயர் ‘க்ரீன் அவென்யு’.

Exuberant price என்பது சரியல்ல. (Exuberant என்றால் உற்சாகமான என்று பொருள்). மிக அதிகமான விலை என்றால் exorbitant என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

மனதை உருக்கும் என்ற அர்த்தம் அளிப்பது heart-rendering அல்ல. Heart-rending.

Hateful என்ற வார்த்தைக்கு பொருள் என்ன? அதாவது Hateful person என்றால் என்ன அர்த்தம்? என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். சூசகமான கேள்விகள்தான்.

Hateful என்றால் வெறுப்பு நிரம்பிய என்று அர்த்தமா அல்லது வெறுக்கத்தக்க என்ற அர்த்தமா?

தரமான அகராதிகளிலும் deserving of hatred அல்லது filled with hatred என்று இருவிதமான பொருள்களைக் கூறியிருக்கிறார்கள்.

Hateful arrogant woman என்றால் அந்தப் பெண்மணி வெறுக்கத்தக்கவர் என்றாகிறது.

Hateful gaze என்றால் வெறுப்பை உமிழும் பார்வை. (வெறுப்பை உண்டாக்கும் பார்வையல்ல).

ஆக, பயன்படுத்தப்படும் விதத்தைக் கொண்டுதான் hateful என்பதற்கான அர்த்தம் விளங்குகிறது.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x