Published : 05 May 2017 11:10 AM
Last Updated : 05 May 2017 11:10 AM

மோகினி டீச்சரும் மூக்குக் கண்ணாடி சாரும்

கல்லூரிக் காலத்தில் எல்லாமே லூட்டிதான்; ஜாலிதான். வகுப் பறையில் செய்யும் குறும்பு களுக்கு அளவே கிடையாது. குறிப்பாக ஆசிரியர்களையும் சக நண்பர்களையும் புனைபெயர் வைத்து அழைத்து எதிர்பாராத நேரத்தில் அவர்களைத் தெறிக்கவிடுவது ஒரு தனி சுகத்தைத் தரும். புனைபெயர் என்று சொன்னதும் மிகவும் நாகரிகமாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். பட்டப்பெயரைத் தான் ஒரு சபை நாகரிகம் கருதி அப்படிச் சொன்னேன். இப்படிப் பெயர் வைத்து அழைப்பது சரியா தவறா என்றேல்லாம் யோசிக்காமல் தாறுமாறாகப் பெயர்வைத்து அழைத்திருக்கிறோம்.

பெரிய வாய் உடையவரை ‘போண்டா வாயன்’ என்போம். எடுப்பாக இல்லாத மூக்கு உடையவரை ‘சப்பை மூக்கி’ என்றும் அதிகம் சேட்டை செய்பவரை ‘அறுந்த வாலு’ என்றும் கலாய்த்திருக்கிறோம். ஆண் பெண் என்ற வேறுபாடோ பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடோ இன்றி அனைவருக்கும் ஒரு பட்டப் பெயர் நிச்சயம் உண்டு. அதிகம் பேசும் பெண்ணை ‘சவுண்டு பார்ட்டி’ என்போம், ஆங்கிலத்தில் சும்மா அளந்துவிடுவோரை ‘பீட்டர்’ என்போம்.

நண்பர்களைப் போல் ஆசிரியர் களுக்கும் அநியாயமாகப் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவதில் ஒரு தனி இன்பம்தான். மூக்குக் கண்ணாடி, புட்டிப் பால், சிலுக்கு, குண்டு மாமா, மோகினி, பவுடர் மூஞ்சி எனப் பல பெயர்களை ஆசிரியர்களுக்கும் வைத்திருக்கிறோம். நண்பர்களின் பெயரைச் சுருக்கி அதைக் கிண்டலடிப்பதும் உண்டு. நன்றாக உடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் கிண்டலுக்கு ஆட்பட்டே ஆக வேண்டும். கோண மூக்கன். முளியாங்கண்ணி, அட்டை கத்தி, அராத்து, தெனாலி ராமன் குதிரை, ஒட்டு மீசை அன்னாசி, தேங்காய் சீனிவாசன், சப்ப குமாரு, ஓணான் மண்டை, வெள்ளை தாடி, டை அடிச்ச மண்ட, உப்பு மூட்டை இப்படிப் பெயர்கள் நீண்டுகொண்டே செல்லும்.

இவற்றின் பெயர்க் காரணங் களுக்கும் பெரிய புராணமே உண்டு. நீங்கள் மற்றவர்களுக்கு வைத்த பெயர்களெல்லாம் நினைவுக்கு வருகிறதா? இப்படி ஒருவரை இஷ்டத்துக்குப் பெயர் வைத்துக் கூப்பிடுவது சரியா என்றெல்லாம் தோன்றாத இளமைப் பருவத்தில் இதெல்லாம் சகஜம் தானே என்று சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். மேலும் நம்மை மட்டும் விட்டா வைத்தார்கள் நமக்கும் என்னென்ன பெயர்களோ என்று யோசித்தபோது, வர்லாம் வர்லாம் வா என்கிறது மனசு.

- பாரதி வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x