Published : 25 Jul 2016 12:08 PM
Last Updated : 25 Jul 2016 12:08 PM

வங்கிகளை அழுத்தும் `கிரெடிட் கார்டு’!

2016-ம் ஆண்டின் தொடக்கத் திலிருந்து வெளிவரும் செய்திகள், புள்ளி விபரங் கள் வங்கிகளுக்கு சாதகமாக இல்லை. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ. 4 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. அதாவது அந்த வங்கிகளின் சந்தை மதிப்பை விட 1.5 மடங்கு அதிகமாக வாராக்கடன் இருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளின் வாராக்கடனும் அதிகரித்துள்ளது. இதைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. அதே சமயத்தில் சமீபத்தில் வெளியான இன்னொரு புள்ளிவிபரமும் வங்கிகளுக்கு சாதகமாக இல்லை. ஆம் கிரெடிட் கார்டு வாராக்கடனும் தற்போது அதிகரித்திருக்கிறது.

கடந்த மே மாதம் வரை கிரெடிட் கார்டு வாராக்கடன் 42,100 கோடி ரூபாயாக இருக்கிறது. இதனால் வங்கி களுக்கு மேலும் சுமை கூடியுள்ளது.

2008-ம் ஆண்டு சர்வதேச பொருளாதார மந்தநிலையின் போது கிரெடிட் கார்டு வாராக்கடன் 27,000 கோடி ரூபாயாக இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டில் வாராக்கடன் 42,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடன் அதிகரித்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். கிரெடிட் கார்டு கடன் வசதி, இஎம்ஐ-ஆக மாற்றிக் கொள்ளும் வசதி என ஏராளமான சாதக அம்சங்கள் கிரெடிட் கார்டில் உள்ளன. வங்கிகளுக்கு சென்று ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்குவதில் ஏற்படும் சிரமம் அதிகம். ஆனால் ஒரு கிரெடிட் கார்டு வாங்கி விட்டால் போதும் வங்கியிலிருந்தே நம்மை அணுகி கடன் வேண்டுமா என்று கேட்கும் அளவிற்கு சுலபமாகிவிட்டது.

2008-ம் ஆண்டு கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. சுமார் 2.67 கோடி கிரெடிட் கார்டுகளை வாடிக்கை யாளர்கள் பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு 2011-ம் ஆண்டு 1.75 கோடியாக குறைந்தது. அதன் பிறகு இந்த ஆண்டில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு எண்ணிக்கை 2.50 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடத்தில் மட்டும் 40 லட்சம் புதிய கிரெடிட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதில் சிக்கல் என்னவென்றால் ஒரே நபருக்கு இரண்டு, மூன்று வங்கிகளிலிருந்து கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இரண்டு மூன்று கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் அவர்களின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்களால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதுதான் வாராக்கடன் அதிகரித்ததற்கு காரணம் என்று கூறுகின்றனர்.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் களுக்கு தனிநபர் கடன்கள் அதிகமாக வங்கிகள் வழங்கி வருகின்றன. ஒரு போன் கால் மூலமாக கடன் எளிதாக வழங்கப்படுகிறது. முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வருடம் 19 சதவீதம் அதிகமாக தனிநபர் கடன் வழங்கப்பட்டுள்ளது. வாராக் கடன் அதிகரித்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

வங்கிகள், கிரெடிட் கார்டு தகவல் வழங்கும் மையத்தோடு தொடர்பை வைத்துக் கொண்டு ஒரே நபருக்கு இரண்டு மூன்று கார்டுகள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வாடிக்கையாளரை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கும் போதுதான் தற்போது உள்ள கடன் சுமையைக் குறைக்க முடியும்.

வங்கிகளுக்கு சென்று ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்குவதில் ஏற்படும் சிரமம் அதிகம். ஆனால் ஒரு கிரெடிட் கார்டு வாங்கி விட்டால் போதும் வங்கியிலிருந்தே நம்மை அணுகி கடன் வேண்டுமா என்று கேட்கும் அளவிற்கு சுலபமாகிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x