

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆவி, பிசாசு பற்றிய கருத்துகள் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தின என்பதை விளக்கி ஆரம்பிக்கிறது நூல்.
பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய சாந்தோக்கிய உபநிடதம் எனும் நூலில் அதை எழுதிய ரிஷி உத்தாலகரின் விஞ்ஞானக் கருத்துகள் முதல் இன்றைய நவீன விஞ்ஞானிகளின் கருத்துகள் வரையான தொடர்ச்சியை நூல் தொட்டுக்காட்டுகிறது.
நமது சூரியனின் ஆயுள்காலம் இன்னும் 500 கோடி வருடங்கள்தான். நமது விஞ்ஞானிகள் மனிதன் வாழ தகுதியான கிரகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நமது தொழில் அதிபர்கள் இந்தக் கிரகத்தையும் சுற்றுச்சூழலையும் சேதப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதை உணர்ந்து நமது வாழ்வை நாம் அறிவியல்ரீதியாகவும் ஜனநாயகபூர்வமாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும் என நூல் வலியுறுத்துகிறது.
அறிவியலும் சமூக அக்கறையும் கலந்த விவாதத்தை கொண்டுள்ள நூல்.
நவீன உலகின் அறிவியல் பார்வைகள்
ஆசிரியர்-ம.தேவராஜ், புதிய சிந்தனை பதிப்பகம்,
49/18, பழைய மாம்பலம் சாலை, மேற்கு மாம்பலம்,
சென்னை- 600 033. தொடர்புக்கு:044-24713057, 9042769787