Published : 23 Jan 2017 11:41 AM
Last Updated : 23 Jan 2017 11:41 AM

பங்குச் சந்தைகள்

இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பவை பங்குச் சந்தைகள். நிறுவனங்கள் நிதி திரட்டவும், கடன் வாங்கவும் முதலீட்டாளர்களிடம் செல்வதற்கு முக்கிய பாலமாக உள்ளன. அதுபோல முதலீட்டாளர்கள் நிறுவனங்களை தேர்வு செய்யவும் பங்குச் சந்தைகளையே நாடுகின்றனர். இந்தியாவில் மும்பை பங்குச் சந்தையும் (பிஎஸ்இ) தேசிய பங்குச் சந்தையும் (என்எஸ்இ) முக்கிய பங்குச் சந்தைகளாக உள்ளன. பங்கு வெளியீடுகள், மியூச்சுவல் பண்ட் (பரஸ்பர நிதியம்) விற்பனை, பத்திர விற்பனை, அந்நிய முதலீடு திரட்டல், கடன் சந்தை நிதி திரட்டலில் முக்கிய பங்காற்றுகின்றன. பங்குச் சந்தை ஒழுங்குமுறை (செபி) அமைப்பின் கீழ் இவை கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய இரண்டு பங்குச் சந்தைகள் குறித்த பார்வை.

மும்பை பங்குச் சந்தை ( பிஎஸ்இ )

# உலகில் மிக வேகமாக வர்த்தகம் ஆகும் பங்குச் சந்தைகளில் ஒன்று.

# ஆறு மைக்ரோ விநாடிகளுக்கு ஒரு வர்த்தகம் நடக்கிறது.

# நேட்டிவ் ஷேர் அண்ட் ஸ்டாக் புரோக்கர்கள் அசோசியேஷன் மூலம் 1875-ம் ஆண்டு மும்பை தலால் சாலையில் தொடங்கப்பட்டது.

# 1850-ம் ஆண்டுகளில் மும்பையைச் சேர்ந்த பங்கு வர்த்தகர்கள் மும்பை டவுன் ஹால் சாலையில் ஆலமரத்தடியில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்தபிறகு 1874-ல் தலால் சாலைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 1875-ம் ஆண்டு பங்குச் சந்தைக்கான அமைப்பை முறையாக தொடங்கினர்.

பெயர்மாற்றம்

# 2002 ம் ஆண்டு ’தி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மும்பை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தற்போதைய பெயரான `பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

# நாட்டில் முதல் முதலில் அங்கீகரிக்கப்பட்ட பங்கு சந்தை. 1956ல் கொண்டுவரப்பட்ட தனிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

# இந்தியாவின் முதல் பங்குச் சந்தையாகவும், உலக அளவில் இரண்டாவது பழமையான பங்குச் சந்தையாகவும் உள்ளது.

# நிதி திரட்டல், பங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சிறு தொழில் நிறுவனங்களை பட்டியலிட எஸ்எம்இ செக்யூரிட்டீஸ் என தனி சந்தை வைத்துள்ளது. 2017 ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஐஎப்எஸ்சி என்கிற பெயரில் இந்தியாவின் முதல் சர்வதேச பங்குச் சந்தையை தொடங்கியுள்ளது.

# அதிக நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள சந்தைகளில் முதலிடத்தில் உள்ளது

# உலக அளவிலான தர வரிசையில் பிஎஸ்இ -யின் இடம் 11

# பட்டியலிட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 5,500

வாங்கிய விருதுகள்

# தங்க மயில் குளோபல் சிஎஸ்ஆர் விருது

# சிறந்த நிதி அறிக்கைகளுக்காக ஐசிஏஐ விருது 2006 மற்றும் 2007

# மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காக ஆசிய பசிபிக் மனித வள மேலாண்மை விருது.

செயல்படும் நேரம்

# அலுவல் தொடங்கும் நேரம் காலை 8 - 9

# லாக் இன் நேரம் 9 -9.30

# வர்த்தக நேரம் : 9.55 - 15.30

# பரிமாற்ற நேரம் 15.30- 15.50

# முடிவு நேரம் 15.50 -16.05

# விசாரணை நேரம் 16.50 - 17.35

# அலுவல் முடிவு 17.35

பிஎஸ்இ முத்திரை

# காளை

# பிஎஸ்இ கட்டிட முகப்பில் வெண்கலத்தால் ஆன காளை சிலை உள்ளது. 5 அடி உயரம் 8 அடி நீளத்தில் உள்ள இந்த காளையின் சிலையின் எடை 1 டன்.

# மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடு சென்செக்ஸ். இதுதான் பங்கு வர்த்தகத்தின் அளவுகோள் குறியீடாக உள்ளது.

# பிஎஸ்இ என்கிற ஆங்கில பெயருக்கு கீழே ’எக்ஸ்பீரியன்ஸ் தி நியூ’ என்கிற வாசகமும் இடம் பெற்றிருக்கும்.

இயக்குநர் குழு

# ஒரு தலைவர், ஒரு நிர்வாக இயக்குநருக்கு கீழ் இயக்குநர் குழுவில் 9 பேர் உள்ளனர்.

# பிஎஸ்இ பொதுப் பங்கு வெளீயீடு மூலம் ரூ.1240 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. தனது பங்குச் சந்தையிலேயே பட்டியலிட முடியாது என்பதால் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது.

# சிடிஎஸ்எல், ஐசிசிஎல், பிஎஸ்இ இன்ஸ்டிடியூட், மார்க்கெட் பிளேஸ் டென்னாலஜீஸ் என நான்கு துணை நிறுவனங்களை வைத்துள்ளது.



தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ)

# பங்கு வர்த்தகத்தை முறைப்படுத்த மத்திய அரசால் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தேசிய பங்குச் சந்தை உலக அலவில் 12 வது பெரிய சந்தை. மின்னனு முறையிலான வர்த்தகத்துக்கு 1994-ம் ஆண்டில் மாறியது. இண்டர்நெட் வர்த்தகத்துக்கு 2000-வது ஆண்டில் மாறியது.

# முக்கிய குறியீடு எஸ்அண்ட்பி சிஎன்எக்ஸ் நிப்டி.

# தினசரி வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனை எண்ணிக்கையில் இந்தியாவில் மிகப் பெரிய பங்குச் சந்தை. 1,400-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிளைகளை வைத்துள்ளது.

# 1,300 பங்குகள் வர்த்தகமாகின்றன. உறுப்பினர் புரோக்கர்களின் எண்ணிக்கை 1,000 த்துக்கும் மேல்.

# பொதுப் பங்கு வெளியிட செபியிடம் அனுமதி வாங்கியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம்.

துணை நிறுவனங்கள்

# என்எஸ்சிசிஎல்

# என்எஸ்இ டெக்

# ஐஐஎஸ்எல்

# டாட் எக்ஸ்

# என்எஸ்இ ஐடி

# என்எஸ்ஐசி

முக்கிய பங்குகள்

எல்ஐசி, ஐஎப்சிஐ, எஸ்பிஐ

# தீபாவளி நாளில் மதியத்துக்கு பிறகு முகூர்ந்த் டிரேடிங் முக்கியமான வர்த்தக நடவடிக்கை. தலால் சாலை பங்கு வர்த்தகர்கள் மட்டும் பங்கேற்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x