Last Updated : 30 Mar, 2014 03:32 PM

Published : 30 Mar 2014 03:32 PM
Last Updated : 30 Mar 2014 03:32 PM

போகிற போக்கில்: தன்னிறைவும் மனநிறைவும்

சிறு வயதில் கற்றுக் கொண்ட சிறுதுளி கலையை இன்று பெருவெள்ளமாக்கி இருக்கிறார் கனிமொழி சந்தானம். சென்னையைச் சேர்ந்த இவர், பலவகை ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவர். பள்ளி நாட்களில் அப்பா சொல்லிக் கொடுத்த ஒழுங்கும் அம்மா கற்றுத் தந்த கைவினையும் இப்போதும் தன்னுடன் இருப்பதாகச் சொல்கிறார் கனிமொழி.

“மயிலாடுதுறைதான் என் சொந்த ஊர். பள்ளி நாட்களில் அம்மாவிடம் இருந்து எம்ப்ராய்டரியும், ஒயர் கூடை பின்னுவதையும் கத்துக்கிட்டேன். எனக்கு அதில் ஆர்வம் அதிகமானதால தொடர்ந்து அவற்றைச் செய்தேன். அடுத்தவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்குத் தேறினேன்” என்று சொல்லும் கனிமொழி, திருமணத்துக்குப் பிறகு ஓவியங்கள் மீது ஆர்வம் அதிகரித்ததாகச் சொல்கிறார்.

“திருமணம் முடிந்து சென்னை வந்தேன். எனக்குத் தஞ்சாவூர் ஓவியங்கள் மேல் ஆர்வம் வந்தது. பலரிடம் அந்தக் கலையைத் தேடித்தேடி கற்றுக்கொண்டேன். அதில் டிப்ளமாவும் முடித்தேன். கண்ணாடியில் வரைகிற பலவித ஓவியங்களையும், பாரம்பரிய ஓவியங்களையும் கற்றேன். ராஜஸ்தான் கண்ணாடி வேலைப்பாடு, மீனாகாரி, மதுபானி, வார்லி, பட்டசித்ரா, நிர்மல், கோந்த், தாங்கா, பொம்மி, கேரளா மியூரல், காபி பெயிண்டிங், ரேடியம் பெயிண்டிங், மெட்டல் எம்போஸிங் என பலவற்றைக் கற்று வைத்திருக்கிறேன்” என்று சொல்கிறார் இவர். VWஇவை தவிர ஃபேஷன் நகைகள் செய்வதிலும் சிறந்து விளங்குகிறார்.

தான் வரைகிற விதவிதமான ஓவியங்களைத் தனி நபர்களுக்கும் மும்பை, பெங்களூரூ, டெல்லி, துபாய் போன்ற இடங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும் விற்பனை செய்கிறார். விரும்புகிறவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார். வெளிநாடுகளில் இருந்து நம் கலைகளைக் கற்றுக் கொள்வதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வகுப்பு எடுக்கிறார். கைவினைப் பொருட்கள் கண்காட்சிகள் நடைபெறும் இடங்களில் கனிமொழி சந்தானத்தின் படைப்புகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு.

“கலை என்கிற இந்த உன்னதத்துக்கு எந்தப் பாகுபாடும் கிடையாது. ஆசிரியர், மாணவி, மருத்துவர், இன்ஜினியர், இல்லத்தரசி எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் என்னிடம் பயிற்சி வகுப்புக்கு வருகிறார்கள். இந்தக் கலை, பல தரப்பட்ட மக்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. என் படைப்புகளை விற்பனை செய்வது சார்ந்த தன்னம்பிக்கையையும் தந்திருக்கிறது” என்கிறார்.

தான் கற்றுக்கொண்ட கலை மனநிறைவையும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், பொருளாதாரத் தன்னிறைவையும் தருவதாகச் சொல்கிறார் கனிமொழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x