Published : 29 May 2017 11:13 AM
Last Updated : 29 May 2017 11:13 AM

வெற்றி மொழி: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

1882ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்க அரசியல் தலைவர். 1933 முதல் 1945 வரை அமெரிக்காவின் முப்பத்து இரண்டாவது அதிபராகப் பணியாற்றினார். இரு தடவைகளுக்கு மேல் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர் ஒருவரே. இரண்டாம் உலக போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றில் திறம்பட செயல்பட்டவர். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் தலைவராகவும், ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் ஆப்ரகாம் லிங்கன் ஆகியோருடன் சேர்த்து அமெரிக்காவின் மூன்று முக்கிய அதிபராகவும் மதிப்பிடப்படுகிறார்.

# கல்வியே ஜனநாயகத்தின் உண்மையான பாதுகாப்பு.

# நமது பூமியின் நுரையீரல்கள் போன்றவை காடுகள்.

# சுயநலனே அனைத்து உண்மையான நேசத்திற்கும் எதிரி.

# தனது மண் வளத்தை அழிக்கும் ஒரு நாடு தன்னையே அழித்துக் கொள்கிறது.

# ஆன்மீக சக்தியின் தாக்கத்தை உடல் வலிமையால் ஒருபோதும் நிரந்தரமாக தாங்கமுடியாது.

# பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் இல்லாமல், உண்மையான தனிமனித சுதந்திரம் இருக்க முடியாது.

# நதிகள் தங்களை கடலில் இழந்து விடுவதைப்போல, நற்குணங்கள் சுயநலனில் இழக்கப் படுகின்றன.

# நாமே அரசாங்கம், அது நம்மை மீறிய அந்நிய சக்தியல்ல என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x