Published : 08 May 2017 09:55 AM
Last Updated : 08 May 2017 09:55 AM

இளைஞர்களை ஈர்க்கும் ஹோண்டா டபிள்யூ ஆர்-வி!

ஹோண்டா நிறுவனம் இந்தியச் சந்தையில் காலூன்றி, மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டது. தலை முறைகளைக் கடந்து காரின் பயணம் தொடர, அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான கார்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது ஹோண்டா. இந்த வகையில் நகர்ப்புற இளைஞர்களைக் கவரும் வகையில் இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்தான் ஹோண்டா டபிள்யூஆர்-வி. மார்ச் மாதம் சந்தைக்கு அறிமுகமானபோதிலும் ஏப்ரல் மாதத்திற்குள் 12 ஆயிரம் முன் பதிவுகளைப் பெற்றதிலிருந்தே இந்தக் காருக்கான எதிர்பார்ப்பு பலரிடமும் உருவாகியுள்ளதை உணர முடியும். முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்திய போதிலும், ஆட்டோமொபைல் பத்திரி கையாளர்கள், ஊடகத்துறையினர் இந்த வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதற்கான வாய்ப்பை கோவாவில் இந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் கோவா-வின் சாலைகளில் மட்டுமின்றி இங்கு உருவாகிவரும் மின்னணு தொழிற்பேட்டை சாலைகளில் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. இனி காரின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக விளங்கும் ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே புதிய ரக டபிள்யூஆர்-வி-யும் உருவாக்கப்படுகிறது. ஹோண்டாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இந்திய சாலைகளுக்கென்று குறிப்பாக இந்தியாவுக்கென்று வலது புற ஸ்டீரிங் நுட்பத்தோடு வடிவமைத்த கார் இது என்று இதன் சிறப்பம்சங்களை விவரிக்கையில் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் குறிப்பிட்டார். சொகுசு மற்றும் ஆடம்பர தோற்றத்துடன் கூடிய செடான் கார்களே இன்றைய நகர்ப்புற இளைஞர்களை ஈர்ப்பதாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அனைத்துக்கும் மேலாக கண்ணாடி மேற்கூரை இதன் சிறப்பம்சம். ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம், இரட்டை ஏர்பேக் ஆகியன இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சங்கள் என பட்டியலிட்டார். 6 கண்கவர் வண்ணங்கள் மற்ற கார்களிலிருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாய் இருந்தது.

வலிமை, உறுதி மற்றும் போதிய இட வசதி ஆகிய மூன்று சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதை பயணத்தின் போது உணர முடிந்தது.

இதன் டீசல் இன்ஜின் 1.5 லிட்டர் கொண்டதாகவும் 6 கியர்களுடன் வந்துள்ளது. பெட்ரோல் மாடல் 1.2 லிட்டர் இன்ஜினும் 5 கியர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் புதிதாக உருவாக்கப் பட்டு வரும் மின்னணு தொழிற் பேட்டையில் அங்கொன்றும் இங் கொன்றுமாக புதிய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. நகரத்தின் பிற பகுதி களுடன் இணைப்பதற்காக போடப் பட்ட சாலைகள் மிகவும் விசாலமானவை யாக இருந்தன. ஆள் நடமாட்டம் இல் லாத, அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்று கொண்டிருந்த வாகனங்கள், மலைப் பகுதியை ஒட்டி அமைந் திருப்பதால் சீரான ஏற்ற, இறக்கத்துடன் அமைக்கப்பட்டிருந்த சாலையில் 100 கி.மீ வேகத்தில் இனிமையாக பயணிக்க முடிந்தது.

பொதுவாக கார் ஆலைகளில் உள்ள சோதனை சாலைகளுக்கும், வழக்கமான சாலைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஒரு காரின் செயல்பாடுகளை நன்கு அறிய வேண்டுமென்றால் அவற்றை நகர சாலைகளில் ஓட்டிப் பார்க்கும்போது தான் அதன் உண்மையான செயல் திறனை அதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை உணர முடியும். அந்த வகை யில் இந்த சாலைப் பயண ஓட்டம் மிகச் சிறப்பான ஏற்பாடாகவே தோன்றியது. பெட்ரோல் மாடலின் இன்ஜின் 1.2 லிட்டர் என்பதால் அதன் இழு விசை சற்றுக் குறைவாகத் தோன்றியது.

எங்களுடன் வந்திருந்த டி.வி. நிருபரும், கேமராமேனும், காரை அங்குலம், அங்குலமாக வர்ணித்தபடி பயணித்தனர். மற்றொரு காரில் கேமிரா மேன் அமர்ந்திருக்க, புதிய ரக டபிள்யூஆர்-வி மாடலை அதன் செய்தியாளர் ஓட்டியபடியே வர்ணித்தார். நகர சாலைகளுக்குள்ளும் இந்தப் பயணம் தொடர்ந்தது.

இதையடுத்து டீசல் மாடல் காரின் செயல்பாடுகளை அறிய அதை ஓட்டிய போது அந்த இன்ஜினின் இழுவிசை வேகத்தை உணர முடிந்தது. சொடுக்கும் நேரத்தில் உச்சபட்ச வேகத்தை எட்டுவதையும் பார்க்க முடிந்தது.

நகர்ப்புற இளைஞர்களுக்கு ஏற்றதாக பெட்ரோல் மாடல் இருந்தாலும், இழு விசை மற்றும் வேகத்தை விரும்பு வோரின் தேர்வாக நிச்சயம் டீசல் மாடல் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x