புராண இந்தியா முழுவதும் ஜவுளிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுக்கும் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஜவுளித் துறையில் பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொள்ள இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியலை ப்ளஸ் டூவில் பாடமாக எடுத்துத் தேர்வாகியிருக்க வேண்டும்.
ஜவுளித் துறையில் பெண்கள் கோலோச்சும் காலம்
ஜவுளி ஆடைத் தொழிலில் உற்பத்தி சாத்தியங்களைப் பெருக்குவதற்காகவும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கு உயிர்கொடுக்கும் விதமாகவும் மத்திய அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதற்கான ஏற்பாடு இது.
ஜவுளித் துறையைப் பொறுத்தவரை 70 சதவீதம் பெண்கள் இந்தியாவெங்கும் வேலையில் இருக்கின்றனர். இத்துறையில் பெண்கள் தன்னிறைவு அடைவதற்காக, பெண் ஊழியர் மேம்பாட்டுக்காகப் பல சீர்திருத்தங்களையும் மத்திய அரசு செய்வதற்கு முன்வந்துள்ளது.
இத்துறையில் பணியாற்ற வரும் புதிய பெண் பணியாளர்களுக்கு மாத ஊதியம் 15 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால் வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பான 12 சதவீத ஊதியப் பணத்தை அரசே முதல் மூன்று ஆண்டுகளுக்குச் செலுத்தும். தற்போது 8.33 சதவீதம் வைப்பு நிதிப் பங்களிப்பை மத்திய அரசு, ப்ரதான் மந்திரி ரோஜ்கர் ப்ரொத்சகான் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தப் பங்களிப்பு செலுத்தப்படுகிறது. கூடுதல் 3.67 சதவீதப் பங்களிப்பை மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வழங்குகிறது.
வாரத்துக்கு எட்டு மணி நேரத்துக்கும் மேல் கூடுதல் நேரம் (ஓவர் டைம்) பணி யாற்றுபவர்களுக்கு அதிக வருவாய் தர வேண்டுமென்ற நிலையும் இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் நடைமுறைக்கு வரும்.
எட்டு கஜம் அளவுகொண்ட பனாரஸ் பட்டுச் சீலையை ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைத்துவிடலாம் என்று பெருமையுடன் கூறப்படுவதுண்டு. அந்த அளவுக்குப் புகழ்பெற்றவர்கள் நமது நெசவுக் கலைஞர்கள். தொழிற்புரட்சி ஆரம்பமாவதற்கு முன்னரே, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே சிறந்த ஜவுளி இயந்திரக் கருவிகளை உருவாக்கியிருந்த நாடு இந்தியா.
காலத்திலிருந்து இந்தியாவில் நெசவு செய்யப்படும் பருத்தி மற்றும் பட்டுத்துணிகளின் நேர்த்தி மற்றும் தொழில்நுட்பம் மீது உலக நாடுகளுக்கு இருந்த மதிப்பும் வியப்பும் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.
புராண இந்திய ஜவுளித் தொழில்துறை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில்துறையைப் பொறுத்தவரை அயல்நாட்டு வர்த்தகம் மூலம் இந்தியப் பொருளாதாரத்துக்குத் தளராமல் பங்களிப்பு செய்துவருகிறது. தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ‘புதிய ஜவுளிக் கொள்கை’யால் இந்திய ஜவுளித் துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பெருகும் சூழல் உள்ளது.
100 மில்லியன் அமெரிக்க டாலர் புழங்கும் ஜவுளித் துறையில் 4.5 கோடி பேர் நேரடியாகவும் 6 கோடி பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் துறை இது. உற்பத்தியாளர்கள், முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள், பருத்தி உடை ஏற்றுமதியாளர்கள், நெசவாளர்கள், ஜவுளி இயந்திரப் பணியாளர்கள், சாய மற்றும் கச்சாப் பொருட்களைக் கையாள்பவர்கள் எனப் பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஜவுளித் துறையைப் பொறுத்தவரை டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்தவர்களுக்கும், பொறியியல் பட்டதாரிகளுக்கும், கணிப்பொறியாளர்களுக்கும், வேதியியலாளர்களுக்கும், நிர்வாகப் பட்டதாரிகளுக்கும், விற்பனையாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.
ஜவுளிப் பொறியியல்
ஜவுளிப் பொறியியல் கல்வியைப் பொறுத்தவரை பிரத்யேகமாக ஜவுளி இயந்திரங்கள் மற்றும் ஜவுளி உற்பத்திச் செயல்முறைகளைக் கற்றுக்கொடுக்கும் துறையாகும். இயந்திரவியல், மின்னியல் மற்றும் வேதியியல் பிரிவுகளும் ஜவுளிப் பொறியியல் துறையின் உபதுறைகள்.
இயற்கையாகக் கிடைக்கும் பருத்தி போன்ற பொருட்கள், செயற்கை நூலிழைகளைக் கொண்டு ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. புத்தம் புதிய இயந்திரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஜவுளித் துறையில் அறிமுகமாகிக்கொண்டே வருவதால் அதை வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறனும் ஜவுளித் துறையில் பணியாற்றுபவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளித் துறையைப் பொறுத்தவரை ஆய்வு மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சந்தைப்படுத்துதல் ஆகியவைதான் மூன்று முக்கியமான பிரிவுகள்.
எட்டு கஜம் அளவுகொண்ட பனாரஸ் பட்டுச் சீலையை ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைத்துவிடலாம் என்று பெருமையுடன் கூறப்படுவதுண்டு. அந்த அளவுக்குப் புகழ்பெற்றவர்கள் நமது நெசவுக் கலைஞர்கள். தொழிற்புரட்சி ஆரம்பமாவதற்கு முன்னரே, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே சிறந்த ஜவுளி இயந்திரக் கருவிகளை உருவாக்கியிருந்த நாடு இந்தியா.
காலத்திலிருந்து இந்தியாவில் நெசவு செய்யப்படும் பருத்தி மற்றும் பட்டுத்துணிகளின் நேர்த்தி மற்றும் தொழில்நுட்பம் மீது உலக நாடுகளுக்கு இருந்த மதிப்பும் வியப்பும் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.
எங்கே, என்ன படிக்கலாம்?
* இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி
* குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோவை
* மும்பை யுனிவர்சிட்டி
* ஏசியன் பாலிடெக்னிக்
# அண்ணா பல்கலைக் கழகம்
# பி.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி
# பி.டெக் அப்பேரல் டெக்னாலஜி
# எம்.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி
# எம்.எஸ். டெக்ஸ்டைல் டெக்னாலஜி
# காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிட்யூட், காந்திகிராம், திண்டுக்கல்
பிஎஸ்.சி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் பேஷன் டிசைன்.
# ரத்னவேல் சுப்ரமணியின் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
# பி.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி
# நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, சென்னை
அவினாசிலிங்கம் யுனிவர்சிட்டி பார் வுமன், கோவை
# போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பயோ டெக்ஸ்டைல் டிசைன்,
# கல்வித் தகுதி: பிஎஸ்.சி ஹோம் சயன்ஸ், ஜவுளி, ஆடைத்தொழில் மற்றும் பேஷன் சார்ந்த பட்டப் படிப்புகள் படித்தவர்களும் இதில் சேரலாம்.
பாலிடெக்னிக்குகள்
# அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் பாலிடெக்னிக் காலேஜ், ஈரோடு
அடிப்படைத் தகுதி: பத்தாம் வகுப்பு, கல்விக் காலம்: மூன்றாண்டுகள்
# டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டெக்னாலஜி
# டிப்ளமோ இன் கார்மெண்ட் டெக்னாலஜி,
# டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் ப்ராசசிங்,
# அப்பாரல் ட்ரெய்னிங் அண்ட் டிசைன் சென்டர், முகப்பேர், சென்னை
டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டிசைன்
# கல்வித் தகுதி: ப்ளஸ் டூ, கல்வி காலம்: ஒரு ஆண்டு
# ஈரோடு இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி பாலிடெக்னிக் காலேஜ், ஈரோடு
# டிப்ளமோ இன் அப்பேரல் டெக்னாலஜி
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்வானால் போதும் கல்விக் காலம் : மூன்று ஆண்டுகள்
டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் ப்ராசசிங்
# கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்வானால் போதும் கல்விக் காலம் : மூன்று ஆண்டுகள்
இன்டர்நேஷனல் அகாடமி ஆப் பேஷன் அண்ட் டிசைன், சூளை, சென்னை
# டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டிசைன்
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ, பட்டப் படிப்பு, கல்விக் காலம் : ஒரு வருடம்
நல்ல சம்பளம் உத்திரவாதம்
டெக்ஸ்டைல் பட்டப் படிப்பு முடித்த பொறியாளர்களும் டிப்ளமோ பட்டயம் பெற்றவர்களும் 12 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தொடக்க சம்பளமாகப் பெறலாம். அனுபவமும் பிரத்யேகத் திறன்களும் அதிகரிக்கும் நிலையில் சம்பளம் கூடும். அனுபவமுள்ளவர்கள் 50 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஜவுளித் துறையில் எம்.டெக். பட்டப் படிப்பு படித்தவர்கள் தொடக்க நிலையில் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாத வருவாயை எதிர்பார்க்கலாம்.