Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

அண்ணாமலை பல்கலை. புதிய துணைவேந்தர் யார்?- தேர்வுக்குழு நியமனம்

அரசு உதவி பெறும் பல்கலைக் கழகமாக இருந்துவந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு அரசு பல்கலைக்கழகமாக மாற்றப் பட்டது. துணைவேந்தராக இருந்த எம்.ராமநாதனை நிதி முறைகேடு புகார் தொடர்பாக தமிழக அரசு தற்காலிக பணிநீக்கம் செய்தது. இதற்கிடையே, பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை கவனித்துக் கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய துணைவேந்தரை தேர்வுசெய்யும் வகையில் சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத்துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.ஆழ்வார், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பி.குணசேகரன், தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்

தின் உறுப்பினர் சி.முருகதாஸ் ஆகியோரை உள்ளடக்கிய தேர்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது.

இந்த குழுவின் அமைப் பாளராக பேராசிரியர் ஆழ்வார் செயல்படுவார். இந்த குழு, துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் அடங்கிய பட்டியலை பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். அதில் இருந்து ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார்.

இதற்கான அரசாணையை தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x