Published : 26 Jun 2017 11:11 AM
Last Updated : 26 Jun 2017 11:11 AM

வெற்றிமொழி: ஜெஃப் பெஸோஸ்

1964 ஆம் ஆண்டு பிறந்த ஜெஃப் பெஸோஸ் அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் கொடையாளர். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் விற்பனை நிறுவனமான அமேசான் டாட் காமின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி . மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் மற்றும் அமெரிக்க பெரும் முதலீட்டாளரான வாரன் பபெட் ஆகிய சிறந்த தொழிலதிபர்களுக்கு அடுத்த இடத்தில் மதிப்பிடப்படுகிறார். இணையவழி சில்லறை வணிகம் மட்டுமின்றி வான்வெளி மற்றும் செய்தித்தாள் ஆகியவையும் இவரது வணிகத்தில் அடங்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கௌரவ டாக்டர் பட்டம் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

# கடினமான காரியங்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் புகழை சம்பாதிக்கிறீர்கள்.

# நாங்கள் வெற்றிகரமாக இருப்பதற்கு காரணமான மூன்று பெரிய காரணிகள்: வாடிக்கையாளரை முதன்மைப்படுத்துவது, புதுமைகளைக் கண்டறிவது மற்றும் பொறுமையாக இருப்பது.

# வாடிக்கையாளர் உங்களை அழைக்கத் தேவையில்லை என்றால், உங்களிடம் பேச வேண்டிய அவசியமில்லை என்றால் அதுவே சிறந்த வாடிக்கையாளர் சேவை.

# விருந்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களாக எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் பார்க்கிறோம், நாங்கள் விருந்தளிப்பவர்களாக இருக்கிறோம்.

# நீங்கள் போட்டியாளரை மையப்படுத்தி இருந்தால், அவர் எதையாவது செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். நீங்கள் வாடிக்கையாளரை மையப்படுத்தி இருந்தால், உங்களை முன்னோடியாக செயல்பட அனுமதிக்கிறது.

# உங்கள் வணிகத்தின் நுணுக்கங்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் தோல்வியடையப்போகிறீர்கள்.

# உங்களால் விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியாது என்றால், புதிய அல்லது சுவாரஸ்யமான எதையும் செய்யாதீர்கள்.

# உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் சேவையை மதிக்க வேண்டும் என்பதே உங்கள் விருப்பமாக இருக்க வேண்டும்.

# ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு நீண்டகால பார்வை தேவை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

# நீங்கள் அறையில் இல்லாதபோது மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதே உங்களது பிராண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x