Last Updated : 14 Jun, 2016 10:49 AM

 

Published : 14 Jun 2016 10:49 AM
Last Updated : 14 Jun 2016 10:49 AM

ஆங்கிலம் அறிவோமே - 114: திரும்பத் திரும்ப பேசுற நீ

சில வாரங்களுக்கு முன் vowel இல்லாமல் மூன்று எழுத்துக்களைவிட அதிகம் கொண்ட வார்த்தைகளை சில வாசகர்கள் பட்டியலிட்டதை வெளியிட்டிருந்தோம். ‘vowel இல்லாத இந்த வார்த்தைகள்’ வியப்பு அளித்ததாக சில வாசகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்த வார்த்தைகளைக் கொஞ்சம் மனதில் கொண்டு வாருங்கள். Hymn, nymph, gypsy, myth, lynch. இவற்றில் Y என்ற எழுத்து ஒரு vowel போல (உச்சரிப்பில்) பயன்படுவதைக் கவனித் தீர்களா?

*****

‘Long-term contracts’ என்ற வார்த்தைகளில் contracts என்பது noun என்று புரிகிறது. அதை விளக்கும் term என்பது adjective என்பது புரிகிறது. Long என்ற வார்த்தை term என்பதை விளக்குகிறது. அதாவது adjective-ஐ விளக்கும் ஒரு வார்த்தை. “இதுவும் adjective தானா?’’ என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.

‘Long-term contracts’ என்பதில் Long-term என்பது compound adjective.

Compound adjectiveக்கு வேறு சில எடுத்துக்காட்டுகள் இதோ. 8-year-old girl, Entry-level salaries, Second-quarter profit.

பொதுவாக compound adjectiveக்கு இடையே hyphen காணப்படும்.

*****

Grant என்றால் மானியம். Aid என்றால் உதவி. அதென்ன grant-in-aid? என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

ஒரு குறிப்பிட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு ஒதுக்கும் (அளிக்கும்) நிதியை grant-in-aid என்பதுண்டு. இந்தத் தொகையை ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்குப் பயன்படுத்த வேண்டும். என்றாலும் அதைப் பயன்படுத்தும் விதத்தில் மாநிலங்களுக்குச் சுதந்திரம் உண்டு. எனினும் எப்படிச் செலவானது என்பது குறித்த தகவல்களைப் பெறும் உரிமை மத்திய அரசுக்கு உ ண்டு. இந்த முறையைத்தான் grant-in-aid அளிப்பதாகக் கூறுகின்றனர்.

*****

‘I do not want to play a second fiddle’ என்று ஓர் அரசியல்வாதி கூறியதாகப் படித்தேன் இதற்கு என்ன அர்த்தம்? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் ஒரு நண்பர்.

Fiddle என்றால் வயலின். ஒரு விஷயத்தை இன்னொருவர் செய்வதற்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட வேண்டிய நிலை அல்லது மற்றவரைச் சார்ந்திருக்கும் நிலையை இப்படிக் குறிப்பிடுவார்கள். Tired of playing a second fiddle, he resigned and started his own company. ‘என்னாலே சும்மா ஒத்து ஊதிக்கிட்டே இருக்க முடியாது’.

இந்த இடத்தில் வேறு சில ‘இசை வார்த்தைகள்’ பற்றியும் அறிந்து கொள்ளலாமே.

Blow your own trumpet என்றால் உங்கள் பெருமையை நீங்களே அதிகமாகக் கூறிக் கொள்வது என்று அர்த்தம். Do not play your own trumpet என்றால் ‘ரொம்பவும்தான் பீற்றிக் கொள்ளாதே’ என்று பொருள்.

And all that jazz என்றால் அது தொடர்பான எல்லா சிறு விஷயங்களையும் உள்ளடக்கியது என்று அர்த்தம். When you shift your house, take your furniture, kitchenware and all that jazz.

Like a broken record என்றால் சொன்னதையே மீண்டும் சொல்வது என்று அர்த்தம். ‘எதற்காக கீறல் விழுந்த ரெகார்டு மாதிரி அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்?’ என்ற வாக்கியம் நமக்குத் தெரிந்ததுதானே.

It takes two to tango. (Tango எனும் இசை நடனத்தில் இருவர் பங்கு பெற்று இணைந்து ஆடுவார்கள்). இருவருக்கிடையே ஒரு பிரச்சினை உருவானால் அதில் இவர் முழுமையாகக் குற்றமற்றவர் என்று யாரையும் கூறிவிட முடியாது.

ஒவ்வொருவருக்கும் ஓரளவு பங்காவது இருக்கும் என்ற பொருளில் கூறப்படுவதுதான் it takes two to tango. ‘ரெண்டு கையும் தட்டினாத்தானே ஓசை’ என்பதை இந்தப் பொருளிலும் பயன்படுத்துகிறார்கள்.

Face the music என்றால்? எதிர்மறையான விஷயங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்ற அர்த்தம். It was his decision. So he has to face the music.

As clean as the whistle என்றால் மிகமிகச் சுத்தமான என்று அர்த்தம். I have checked his records. They are as clean as a whistle.

Fit as a fiddle என்றால் சிறப்பான உடல் நலத்துடன் இருப்பது. Even at the age of 90, she is fit as a fiddle.

It rings a bell என்றால் பேசப்படும் பொருள் கேள்விப்பட்டதாக இருக்கிறது. ஆனால் அதுபற்றிய முழு விவரங்களும் நினைவுக்கு வரவில்லை என்று அர்த்தம்.

Music to my ears என்றால் கேட்கவே இனிமையாக இருக்கிறது என்ற அர்த்தம் (‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’). எதைக் கேட்க விரும்பினீர்களோ அதைக் கேட்கிறீர்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

அமெரிக்காவில் குழந்தைகளைத் தூங்குவதற்கு அனுப்பும்போது ‘Good night. See you on the big drum’ என்று கூறுவதுண்டு.

LIGHTING - LIGHTNING LIGHTENING

Lightning என்றால் மின்னல். (மின்னலில் ‘e’ இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). மிக மிக வேகமாக (மின்னல் வேகத்தில்) என்ற அர்த்தத்திலும் Lightning பயன்படுத்தப்படுகிறது. That was a lightning mood.

Lightening என்றால் விளக் கேற்றுவது என்று (அல்லது மின்சார பல்புக்கான சுவிட்சை ஆன் செய்வது என்று) சிலர் எண்ணிக்கொள்கிறார்கள். தவறு. அது lighting. Lighting lamps during Deepavali என்பது போல.

Lightening என்றால் குறைத்துக் கொள்வது. He lightened his load.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

சிப்ஸ்

# ஒருவர் tenacious ஆக இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

பிடிவாதமாக. மிக உறுதியாக. Stubborn. He is tenacious and would not take no for an answer.

Chest என்றால்?

கழுத்துக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதி. ஒரு பெரிய உறுதியான பெட்டியையும் இது குறிக்கும்.

# Geometry Box என்பதை எப்படி உச்சரிப்பது?

பல மாணவர்கள் கூறுவதுபோல அது ஜாமென்ட்ரி பாக்ஸ் அல்ல. ஜியோமெட்ரி பாக் ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x