Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 3-வது கட்ட கலந்தாய்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

குரூப்-4 தேர்வில் சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவிகளில் காலியாக உள்ள 165 இடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு பிப்ரவரி 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) செயலாளர் மா.விஜயகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

2007-2008 மற்றும் 2012-2013ம் ஆண்டுகளுக்கான குரூப்-4 பணிகளிடங்களை நிரப்புவதற்கு கடந்த 7.7.2012 அன்று தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3),

பதவியில் எஞ்சியுள்ள காலியிடங்களில் 39 காலிப் பணியிடங்கள் தவிர 165 காலியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள், கலந்தாய்வு நாள், நேரம் ஆகிய விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளன. மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இது குறித்த அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலம் தனியாக அனுப்பப்பட்டு இருக்கிறது.

கலந்தாய்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்கள், தமிழ்

வழியில் 10-ம் வகுப்பு படித்திருந் தால் பள்ளி தலைமை ஆசிரியரிட மிருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். தமிழ் வழி படிப்பு குறித்து விண்ணப்பத்தில் ஏற் கெனவே குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அச்சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.

பிப்ரவரி 3-ம் தேதி நடை பெறும் கலந்தாய்வுக்குவராத விண்ணப்

பதாரர்களால் ஏற்படும் காலியிடங் களை நிரப்ப மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் 87 பேரின் பதிவுஎண்கள் வெளியிடப் பட்டுள்ளன. அவர்கள் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின்படி அப்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப பிப்ரவரி 4-ல் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். கலந் தாய்வுக்கு வர தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x