Published : 21 Jan 2014 12:25 PM
Last Updated : 21 Jan 2014 12:25 PM

சென்னை அறிவியல் கண்காட்சியில் தென்னிந்திய பள்ளி மாணவர்களின் விதவிதமான அறிவியல் சாதனங்கள்

தென்னிந்திய பள்ளி மாணவர் களுக்கான அறிவியல் கண் காட்சி சென்னையில் திங்கள் கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் உருவாக்கிய விதவிதமான அறிவியல் சாதனங்களை பார்க்கலாம்.

அறிவியல் கண்காட்சி

இந்த 27-வது தென்னிந்திய அறிவியல் கண்காட்சி சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற் றும் தொழில்நுட்ப அருங்காட்சி யகம் இதை இணைந்து நடத்து கின்றன. இந்த கண்காட்சியை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கிவைத்தார். விழாவில் அவர் கூறியதாவது:-

அறிவியல் ஆசிரியர்கள்

பள்ளி மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. எனவே, மாணவ-மாணவிகள் தங்களை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கண்டுபிடிப்பாளர்களாக அவர்கள் உருவாக வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களில் மட்டும் 51 ஆயிரத்து757 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன. அவர்களில் 17 ஆயிரம் ஆசிரியர்கள் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என்றார் அமைச்சர்.

220 அரங்குகள்

தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அரசு தேர்வுகள் இயக்குநர் கே,தேவராஜன், தமிழ் நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், அனைவருக்கும், கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.) மாநில இயக்குநர் பூஜா குல்கர்னி, விஸ்வேஸ் வரய்யா தொழில் மற்றும் தொழில் நுட்ப இயக்குநர் கே.ஜி.குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். நிறைவாக, கர்நாடக கல்வி அதிகாரி முத்துக்குமார் நன்றி கூறினார்.

அனுமதி இலவசம்

இந்த அறிவியல் கண்காட்சியில் மொத்தம் 220 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநிலத் திலும் மாநில அளவிலான கண் காட்சியில் தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் புராஜெக்ட் மாதிரிகளை வைத்துள்ளனர். சூரிய ஒளியில் இயங்கும் ஹீட்டர், விவசாய பண் ணைக்கருவிகள், குடிநீர் சுத்தி கரிப்பு சாதனம், சூரிய ஒளியில் ஓடும் சைக்கிள், நீர் இறைப்பு மற்றும் நீர் தெளிப்பான் கருவிகள், விமானம், ஹெலிகாப்டர், ஹோவர் கிராப்ட் மாதிரிகள், கால்பந்து விளையாடும் ரோபோக்கள், அணு உலை, இஸ்ரோ மாதிரி கூடங்கள், பனி மனிதன், மாதிரி கோளரங்கம் என ஏராளமான அறிவியல் மாதிரி கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

வருகிற 24-ம் தேதி வரை நடைபெறும் இந்த அறிவியல் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், பொதுமக்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் பார்வையிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x