டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV | மாதிரி வினா-விடை 9: பொது அறிவு

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV | மாதிரி வினா-விடை 9: பொது அறிவு
Updated on
4 min read

205. தேயிலையில் அதிகமாக காணப்படுவது

(a) கைபன்

(b) டென்னின்

(c) அ மற்றும் ஆ

(d) மேலே உள்ள எதுவும் இல்லை

206. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலத்தில் லிக்னைட் நிலக்கரி படிவு இல்லாத மாநிலம் எது?

(a) தமிழ்நாடு (b) மேற்குவங்கம்

(c) நாகலாந்து (d) ராஜஸ்தான்

207. அதிக பழங்குடியின மக்கள் உள்ள மாவட்டத்தைக் கொண்டுள்ள மாநிலம் எது?

(a) மிசோரம் (b) மணிப்பூர்

(c) உத்திரபிரதேசம் (d) நாகலாந்து

208. மண் உருவாவதற்கு எக்காரணி மூலாதாரமாக உள்ளது

(a) மலைக்கூறுகள்

(b) காலநிலை

(c) தாவரங்கள்

(d) மேலே உள்ள அனைத்தும்

209. கரிசல் மண் கருப்பாக இருப்பதற்கான கலவை யாது?

(a) இரும்பு (b) அலுமினியம்

(c) a மற்றும் b (d) இதில் எதுவுமில்லை

210. கீழே உள்ளவற்றில் எது கடற்கரை நகரமற்றது?

(a) சென்னை (b) சூரத்

(c) ராய்ப்பூர் (d) மும்பை

211. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எதுமிகச் சரியாக பொருந்துகிறது?

1. சாரநாத் - புத்தர் பிறந்த இடம்

2. லும்பினி – புத்தர் ஞானம் பெற்ற இடம்

3. புத்தகயா – முதல் போதனை

4. குஷிநகர் - புத்தர் இறந்த இடம்

(a) 1 (b) 2

(c) 3 (d) 4

212. பொருத்துக:

A. குஷாணர்கள் - 1. திராவிடப் பாணி

B. குப்தர்கள் - 2. வேசரா பாணி

C. சாளுக்கியர்கள் - 3. நகரா பாணி

D. சோழர்கள் - 4. காந்தாரக் கலை பாணி

A B C D

(a) 4 3 2 1

(b) 4 2 1 3

(c) 3 2 1 4

(d) 3 1 2 4

213. கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொள்க

1. மெகருளி இரும்புத் தூண் கல்வெட்டு சந்திரகுப்தா I இன் வெற்றிகளை கூறுகிறது.

2. அலகாபாத் தூண் கல்வெட்டு ஸ்கந்த குப்தரைப் பற்றி கூறுகிறது.

எது தவறு?

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2 (d) இரண்டும் இல்லை

214. தேசிய முதலீட்டு நிதி உருவாக்கப்பட்ட ஆண்டு.

(a) 1996.

(b) 1999.

(c) 2002.

(d) 2005.

215. எலிபெண்டா என்ற தீவின் உண்மையான பெயர்

(a) எல்லோரா (b) கன்கேரி

(c) சோலாப்பூர் (d) புரி

216. புகழ்பெற்ற விக்ரமசீலா பல்கலைக் கழகத்தை நிறுவியவர்

(a) தேவபாலா (b) மஹிபாலா

(c) தர்மபாலா (d) ராமபாலா

217. பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

1. இல்பர்ட் மசோதா இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க லிட்டன் பிரபுவால் கொண்டுவரப்பட்டது.

2. கி.பி.1883 ஆம் ஆண்டு இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது

தவறான வாக்கியம் எவை:

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2 (d) எதுவுமேயில்லை.

218. வேவல் திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு

(a) கி.பி.1942 (b) கி.பி.1944

(c) கி.பி.1945 (d) கி.பி.1947

219. முதல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நாள்

(a) 26 ஜனவரி கி.பி.1942

(b) 26 ஜனவரி கி.பி.1930

(c) 19 நவம்பர் கி.பி.1926

(d) 15 ஆகஸ்ட் கி.பி.1947

220. பொருத்துக

A. விடுதலை நாள் - 1. கி.பி.1935

B. ஆகஸ்ட் சலுகை - 2. கி.பி.1942

C. கிரிப்ஸ் தூதுக்குழு - 3. கி.பி.1940

D. இந்திய அரசுச் சட்டம் - 4. கி.பி.1939

A B C D

(a) 4 1 2 3

(b) 4 3 2 1

(c) 2 1 3 4

(d) 2 1 4 3

221. கீழ்க்காணும் தொடரினை கருத்தில் கொள்க.

1. மாநில சட்ட மேலவையை உருவாக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

2. சட்ட மேலவையை சட்ட பேரவை பெரும்

பான்மையின் அடிப்படையில் கணிக்க முடியும்

எது சரியான கூற்று?

(a) 1 மட்டும் (b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2 (d) எதுவுமில்லை

222. ஒரு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் வழக்கறிஞராக இருக்க வேண்டும்

(a) 5 வருடம் (b) 10 வருடம்

(c) 8 வருடம் (d) 15 வருடம்

223. சரியான கூற்றை தேர்ந்தெடுக்க

1. உள்ளாட்சி அமைப்பின் பதவி 5 ஆண்டுகள்

2. போட்டியிட குறைந்த பட்ச வயது 21

3. மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது

4. 11-வது அட்டவணையில் 29 பொருளும் 12-வது அட்டவணையில் 18 பொருளும் உள்ளன

(a) 1, 2 மற்றும் 4 (b) 1 மற்றும் 4

(c) 1 மற்றும் 2 (d) அனைத்தும்

224. ஜம்மு காஷ்மீரின் அலுவலக மொழி

(a) இந்தி (b) அராபிக்

(c) உருது (d) பெர்ஸின்

225. பட்டியல் இனம் மற்றும் மலைவாழ் மக்களின் பகுதிகளின் நிர்வாகம் எதன் கீழ் வருகிறது

(a) 4-வது அட்டவணை

(b) 5-வது அட்டவணை

(c) 6-வது அட்டவணை

(d) 9-வது அட்டவணை

226. எந்த அட்டவணையில் வட்டார மொழிகள் உள்ளன?

(a) அட்டவணை VI (b) அட்டவணை VII

(c) அட்டவணை VIII (d) அட்டவணை XII

227. கீழ்க்கண்டவற்றில் எது ஷரத்து 19-ன்கீழ் வராது?

1. சுதந்திரமான இயக்கத்துக்கான

உரிமை

2. சுதந்திரமாக தொழில் செய்வதற்கான உரிமை

3. தொடக்கக்கல்வி கற்கும் உரிமை

4. சொத்துரிமை

சரியான விடையைத் தேர்ந்தெடு

(a) 1, 2 மற்றும் 3 (b) 1, 2, 3 மற்றும் 4

(c) 2 மற்றும் 3 (d) 3 மற்றும் 4

228. நுகர்வோர் நீதிமன்றங்களில்

(a) வாய்மொழி விவாதம் மட்டுமே உண்டு

(b)எழுத்து மூலமான விவாதம் மட்டுமே உண்டு

(c)எழுத்து மூலமான விவாதத்துக்கு வாய்மொழி துணை விவாதம் உண்டு

(d) இவை அனைத்தும்

229. பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62லிருந்து 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?

(a) 104-வது சட்டதிருத்தம்

(b) 101-வது சட்டதிருத்தம்

(c) 102-வது சட்டதிருத்தம்

(d) 103-வது சட்டதிருத்தம்

230. நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது, எவை சரியானவை?

1. அது 1985ல் இயற்றப்பட்டது

2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது

(a) 1 மட்டும்

(b) 2 மட்டும்

(c) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும்

(d) 1-ம் அல்ல, 2-ம் அல்ல

231. ஒருவர் தன் முழு உயர பிம்பத்தைப் பார்க்க வேண்டும் என்றால், ஒரு சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?

(a) அவரது உயரத்துக்குச் சமமாக

(b) அவர் உயரத்தை விட சற்று அதிகமாக

(c) அவர் உயரத்தில் கிட்டத்திட்ட பாதியளவு

(d) அவர் உயரத்தில் கிட்டத்திட்ட கால்பங்கு

232. நட்சத்திரங்கள் மின்னுவது போல் தோன்றக் காரணம்?

(a) விட்டுவிட்டு ஒளிர்தல்

(b) வளிமண்டல வெப்பச் சலன சுழற்சி

(c) வளிமண்டல ஒளி விலகல்

(d) பூமியின் நிலையில்லா இயக்கம்

233. ஹைட்ரஜன் வெடிகுண்டு செயல்படும் கோட்பாடு

(a) கட்டுப்படுத்தப்பட்ட பிளவு வினை

(b) கட்டுப்படுத்தப்படாத பிளவு வினை

(c) கட்டுப்படுத்தப்பட்ட இணைவு வினை

(d) கட்டுப்படுத்தப்படாத இணைவு வினை

234. இவற்றில் எதற்கு அலை நீளம் அதிகம்

(a)புற ஊதாக் கதிர்கள்

(b)ஒளிக் கதிர்கள்

(c)காமா கதிர்கள்

(d)அகச்சிவப்புக்கதிர்கள்

235. கன்றுக் குட்டியில் பாலினை செரிக்க வைக்கும் எந்த ஒரு புரதம் மனித செரிமான அமைப்பில் இல்லை?

(a) பெப்சின் (b) ரென்னின்

(c) ட்ரிப்சின் (d) ரெஸின்

236. தாவரத்தில் ஆக்குத் திசு பணி என்ன

(a) புது செல்களை உருவாக்குவது.

(b) தாவரத்துக்கு ஊட்டம் கொடுப்பது.

(c) சுரக்குவது

(d) தண்ணீர் மற்றும் தாதுக்களை கடத்துவது.

237. உலக புற்று நோய் தினம்

(a) ஜனவரி 15 (b) செப்டம்பர் 19.

(c) பிப்ரவரி 14. (d) டிசம்பர் 15

238. சூரிய ஒளி மற்றும் மீன் ஈரல் எண்ணெய், ஓட்ஸ்- உணவு மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்குகள் எக்குறைபாட்டை ஏற்படுத்தாது.

1. ஆஸ்டீயோமலேசியா.

2. ஆஸ்டீயோபோரோசிஸ் மற்றும் தொடர் எலும்பு முறிவு.

3. ரிக்கெட்ஸ்.

4. கொழுப்பு கல்லீரல்.

(a) 1,2 (b) 1,2,3

(c) 1,3 (d) 1,2,3,4

விடை: 205.c 206.d 207.a 208.a 209.c 210.c 211.d 212.a 213.c 214.d 215.d 216.c 217.a 218.c 219.b 220.b 221.b 222.b 223.d 224.c 225.b 226.c 227.d 228.c 229.a 230.c 231.c 232.c 233.d 234.d 235.b 236.a 237.c 238.b

எம்.கார்த்திகேயன், கல்வி ஆலோசகர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in