வேலை வேண்டுமா? - அரசுப் பள்ளி ஆசிரியர் பணி

வேலை வேண்டுமா? - அரசுப் பள்ளி ஆசிரியர் பணி
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,144 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தகுதி

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் இக்காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுகலைப் பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி இயக்குநர் பதவிக்கு எம்.பி.எட். பட்டம் அவசியம். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது.

ஆன்லைன்வழியில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்வழியில் படித்து உரிய கல்வித் தகுதியைப் பெற்றவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு உண்டு. தகுதியுடைய முதுகலைப் பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆரம்ப நிலையில் சம்பளம் ரூ.50 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். எம்.எட்., எம்.ஃபில். பட்டம் எனக் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால் அதிகபட்சமாக 2 ஊக்க ஊதியங்கள் (Incentives) பெறலாம்.

நேரடியாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவோருக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் எனப் பதவி உயர்வு வாய்ப்புகளும் உண்டு.

முக்கிய தேதிகள்

எப்போது விண்ணப்பிக்கலாம்?: ஜூன் 24 முதல் ஜூலை 15வரை

விண்ணப்பிக்க: www.trb.tn.nic.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in