Last Updated : 25 Jun, 2019 11:54 AM

 

Published : 25 Jun 2019 11:54 AM
Last Updated : 25 Jun 2019 11:54 AM

ஆங்கிலம் அறிவோமே 270: எண்ணக்கூடியதானு எண்ணிப் பாருங்க!

கேட்டாரே ஒரு கேள்வி

வங்கியில் சேமிப்புக் கணக்கு என்பதை Savings Account என்கிறோம். Current Account என்று ஏன் ஒருவகை வங்கிக் கணக்குக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்?

Current Account-க்கும்,

மின்சாரத்துக்கும் தொடர்பு இல்லை. அதன் தமிழாக்கத்தைப் புரிந்துகொண்டாலே விளங்கிவிடும் - நடப்புக் கணக்கு. பெரும்பாலும் தனிநபர்கள் சேமிப்புக் கணக்கையும் நிறுவனங்கள் நடப்புக் கணக்கையும் வைத்திருப்பார்கள். நடப்புக் கணக்கில் பரிவர்த்தனைகள் அதிகமாக இருக்கும்.

 தவிரப் பெரும் தொகையை டெபாசிட் செய்துவிட்டு அதை ஓரிரு நாட்களிலேயே ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்வது என்பது நடப்புக் கணக்குகளில் அதிகம். சேமிப்புக் கணக்கிலுள்ள தொகைக்கு வட்டி கிடைக்கும். நடப்புக் கணக்கிலுள்ள தொகைக்கு வட்டி கிடையாது.

“Swim with the tide” என்பதற்கு என்ன பொருள்?

மற்றவர்களைப் போலவே நாமும் நடந்துகொள்வது - அது நமக்குப் பிடிக்காவிட்டாலும்கூட! அதாவது ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்பதுதான் நடைமுறை. She swims with the tide as she does not have a mind of her own.

“மல்லாக்கப் படுத்துக்கொள்வது, கவிழ்ந்து படுத்துக்கொள்வது இரண்டையும் ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

முகம் நிலத்தைப் பார்த்தபடி படுத்துக்கொள்வதை prone position என்பார்கள். கவிழ்ந்த நிலை. இதற்கு நேரெதிரான நிலை (அதாவது மல்லாக்கப் படுத்துக்கொள்வது) supine position.

“சமீபத்தில் எனக்கு வந்த வாட்ஸ்அப் செய்தி இது. அதற்கு மெத்தப் படித்த புத்திசாலி ஒருவர் இப்படி விடை அளித்தாராம். I doubt I can. It’s a major part of many many words. Omitting it is as hard as making muffins without flour. It’s as hard as spitting without saliva, napping without a pillow, driving a train without tracks, sailing to Russia without a boat, washing your hands without soap. And, anyway, what would I gain? An award? A cash bonus? Bragging nights? Why should I strain my brain? It’s not worth it”.

எந்தக் கேள்விக்கு இப்படி விடையளித்தார் என்பதை ஊகிக்க முடிகிறதா?’’

நண்பரே, இதை நானும் முன்னர்ப் படித்திருக்கிறேன். “‘E’ என்ற எழுத்து ஒருமுறைகூட இடம்பெறாமல் ஒரு வாக்கியத்தைக் கூற முடியுமா?’’ என்ற கேள்விக்குதான் அவர் இப்படி நீளமாகப் பதிலளித்திருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் “அது முடியாத காரியம்’’ என்று அவர் கூறுவதுபோல இருக்கும். ஆனால், அவர் அளித்த மிக நீண்ட பதிலில்

ஒரு ‘e’ கூட இல்லை என்பதுதான் இதில் வியப்பு.

இதுவரை நடைபெற்ற பல ஆராய்ச்சிகளில் ஆங்கில எழுத்துகளில் மிக அதிகம் பயன்படுத்தப்படுவது ‘e’ என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கேட்டுவிட்டால்

The amount of idlies he consumes is unimaginable.

மேற்படி வாக்கியத்தில் எந்தப் பகுதி தவறானது?

a) the amount of idlies

b) he consumes

c) is unimaginable

d) வாக்கியத்தில் எந்தத் தவறுமில்லை.

பேச்சுவழக்கில் number, amount ஆகிய இரு சொற்களையும் நாம் (தவறாக) மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறோம்.

பொதுவாக amount எனும்போது தொகையைக் குறிக்கிறோம் - total amount என்பதுபோல.

ஆனால், amount of என்பதை எண்ண முடியாத பெயர் சொற்களுக்குத்தான் பயன்படுத்த வேண்டும். Amount of noise, amount of rain, amount of time என்பதுபோல.

உணர்வுகளைக் குறிக்கும்போதும் ‘amount of’ பயன்படுத்தப்படுகிறது. ‘Amount of love’, ‘amount of hate’, ‘amount of pride’.

அதே நேரம் எண்ணக் கூடியவற்றுக்கு முன்னால் ‘amount of’-ஐப் பயன்படுத்தக் கூடாது. Amount of pens அல்ல. Number of pens, amount of topics அல்ல - number of topics.

எனவே, கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் தவறான பகுதி ‘a’.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x