Published : 12 Mar 2018 11:40 AM
Last Updated : 12 Mar 2018 11:40 AM

வெற்றி மொழி: சார்லஸ் ஸ்பர்ஜியன்

1834-ம் ஆண்டு முதல் 1892-ம் ஆண்டு வரை வாழ்ந்த சார்லஸ் ஸ்பர்ஜியன் பிரிட்டிஷ் குருமார், எழுத்தாளர் மற்றும் சிறந்த சமய அறிவுரையாளர் ஆவார். இவரது ஆக்கங்கள் பிரசங்கங்கள், சுயசரிதை, வர்ணனைகள், பிரார்த்தனை புத்தகங்கள், பக்தி பாடல்கள், பத்திரிகை, கவிதை, பாசுரங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பல வகைகளில் அடங்கும். பிரசங்கிகளின் இளவரசர் என்று அழைக்கப்படும் அளவிற்கு, பல்வேறு கிறிஸ்துவ பிரிவினர்களிடையே மிகுந்த செல்வாக்கு உடையவராக விளங்கினார். இவரது படைப்புகள் பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெயில் வகையிலும் மற்றும் பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

# உண்மையை தனது காலணிகளில் வைத்துக்கொண்டு, ஒரு பொய்யானது உலகம் முழுவதும் பாதியளவு பயணிக்க முடியும்.

# நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதல்ல, நாம் எவ்வளவு அனுபவிக்கிறோம் என்பதே மகிழ்ச்சியை உருவாக்குகிறது.

# நேர்மையானது குறைந்த திறமையுடைய ஒருவனை, அதிக திறமையுடைய நேர்மையற்றவனைவிட அதிக மதிப்புமிக்கவனாக ஆக்குகிறது.

# இதயங்களில் உங்களது பெயரை செதுக்குங்கள், கல்லறை பளிங்கு கற்களில் அல்ல.

# அறிவை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்திருப்பதே, ஞானத்தைப் பெறுவது.

# நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை சோதனைகள் நமக்குக் கற்பிக்கின்றன.

# மற்ற மனிதனிடம் எச்சரிக்கையாக இருப்பதைக் காட்டிலும், நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது உங்களிடமே.

# ஒரு இருண்ட மேகம், சூரியன் தனது ஒளியை இழந்துவிட்டது என்பதற்கான அடையாளம் அல்ல.

# நாம் நன்றியுள்ளவனாக இல்லாவிட்டால், தவறான மனநிலையில் இருக்கிறோம் என்று அர்த்தம்.

# வாழ்வின் இனிமையான மகிழ்ச்சிகளில் ஒன்று நட்பு.

# உண்மையான பணிவு என்பது எவ்விதமான தோட்டத்தையும் அலங்கரிக்கக்கூடிய ஒரு மலரைப் போன்றது.

# நமக்குள்ளே உள்ள மோசமான எதிரிகளை நாம் சுமந்துக்கொண்டு செல்கிறோம்.

# உங்களது நன்றியுணர்வின் பாடல்களின் மூலமாக இந்த பூமியை நிரம்பச்செய்யுங்கள்.

# சில நேரங்களில் இழப்பு ஒரு லாபமாக இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x