Published : 26 Mar 2018 11:08 AM
Last Updated : 26 Mar 2018 11:08 AM

அமெரிக்க சந்தைக்காக ஃபோக்ஸ்வேகனின் `அட்லஸ்’

பொ

துவாக அமெரிக்க சந்தையில் இடம்பிடிப்பதுதான் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பிரதான லட்சியம். இதில் சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மட்டும் விதி விலக்காகவா இருந்துவிடப் போகிறது.

புகை மோசடி சோதனையில் சிக்கி தனது இமேஜை இழந்த ஃபோக்ஸ்வேகன் அதை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக அமெரிக்க சந்தைக்கேற்ற எஸ்யுவி வாகனத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் டென்னஸி மாகாணத்தில் சட்னூகா பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவன ஆலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக 34 கோடி டாலரை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் 5 பேர் பயணிக்கும் வகையில் இந்த எஸ்யுவி ரகத்தை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 7 பேர் பயணிக்கும் வகையிலான இந்நிறுவனத்தின் அட்லஸ் மாடல் எஸ்யுவி-க்கள் அமெரிக்காவில் பிரபலம். இதுவும் இந்த ஆலையில்தான் தயாராகிறது. அதேபோல சிறிய ரக வாகனமான பசாட் மாடலும் இந்த சட்னூகா ஆலையில்தான் உருவாகிறது. 5 பேர் பயணிக்கும் இப்புதிய வாகனத்துக்கும் `அட்லஸ்’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x