Published : 13 Mar 2018 10:48 AM
Last Updated : 13 Mar 2018 10:48 AM

வரலாறு தந்த வார்த்தை 21: குளிர்ந்த ரத்தம்!

பை

க்கில் சென்றுகொண்டிருந்தபோது போலீஸ் உதைத்துத் தள்ளியதால் கர்ப்பிணிப் பெண் மரணம். சென்னையில், கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என ஒரு சம்பவத்திலிருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு சம்பவம்.

ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வரும்போதெல்லாம், ‘சே.. என்னப்பா இது. ஈவு இரக்கம் இல்லாம இப்படிப் பண்றாங்களேப்பா?’ என்று நம்மில் பலர் வேதனை அடைந்திருப்போம்.

கொஞ்சம்கூடக் கருணையே இல்லாமல் இவ்வாறு மேற்கொள்ளப்படும் செயல்களைத் தமிழில் ‘ஈவு இரக்கம் இல்லாமல்’ என்று சொல்வதற்கு நிகராக, ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. ‘In cold blood’ என்பதுதான் அது.

அந்தச் சொற்றொடரைத் தமிழில் மொழிபெயர்த்தால், கொடூரமான க்ரைம் கதைக்கு ஏற்ற தலைப்பு கிடைக்கும் இல்லையா?

சரி, ரத்தம் குளிருமா? ரத்தத்துக்கு தட்பவெப்பம் என்று ஏதாவது இருக்கிறதா? 5-ம் நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டு வரையிலான மத்திய காலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் பலர், ஒருவர் கோபப்படும்போது ரத்தம் சூடாக இருப்பதாகவும், அமைதியாக இருக்கும்போது ரத்தம் குளிர்ந்திருப்பதாகவும் நம்பினார்கள்.

அவ்வாறு ரத்தம் சூடாக இருக்கும்போது ஒருவர் கொலை செய்துவிட்டால், அதை அன்று ‘in warm blooded murder’என்று சொல்லிவந்தார்கள். வரலாறு மிகுந்த சுவாரசியம் உடையது. என்ன காரணமோ தெரியவில்லை, காலப்போக்கில், ஒருவர் கோபமடைந்து கருணையே இல்லாமல் மேற்கொள்ளும் கொலைகளை அல்லது செயல்களைச் சுட்டிக்காட்டுவதற்கு ‘இன் கோல்ட் ப்ளட்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கொஞ்ச காலம் வரையில், கோபத்தில் ஒருவர் அவசரப்பட்டுக் கொலை செய்வதைக் குறிப்பிடவே அந்தச் சொற்றொடர் பயன்பட்டுவந்தது. பின்னாளில் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலைகளுக்கும் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அது இன்று வரையிலும் அப்படியே தொடர்கிறது.

மற்றபடி, ‘இன் கோல்ட் ப்ளட்’ என்ற தலைப்பில் ட்ரூமன் கபோட் எனும் எழுத்தாளர் ஒரு நாவலே எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்… உங்களுக்குக் குளிரெடுக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x