Published : 27 Mar 2018 01:36 PM
Last Updated : 27 Mar 2018 01:36 PM

வேலை வேண்டுமா? - இந்திய விமானநிலையப் பணி

மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority of India) இளநிலை அதிகாரி (Junior Executive) என்ற பதவியில் 542 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது.

‘கேட்’தான் ஒரே வழி

2018 கேட் நுழைவுத் தேர்வு (GATE) மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கான இளநிலை அதிகாரிகள் தேர்வுசெய்யப்படுவார்கள். வேறு எந்த எழுத்துத் தேர்வோ நேர்முகத் தேர்வோ குழு விவாதமோ கிடையாது. சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் பட்டதாரிகளும், பி.ஆர்க். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

தேவையான தகுதி

பட்டப் படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 27 ஆகவும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 30 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கேட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுத் தேர்வுசெய்யப்படுவார்கள். இளநிலை அதிகாரி பணியில் சேர்பவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே ரூ.75 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும்.

உரிய கல்வித் தகுதியும் வயதுத் தகுதியும் உடைய பொறியியல், கட்டிடக்கலைப் பட்டதாரிகள் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் இணையதளத்தைப் (www.aai.aero) பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

பிரிவுகளும் காலியிடங்களும்

சிவில் - 100

எலெக்ட்ரிக்கல் - 100

எலெக்ட்ரானிக்ஸ் - 330

ஆர்க்கிடெக்சர் - 12

முக்கியத் தேதி

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் - மார்ச் 28

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - ஏப்ரல் 27

கட்டணம் செலுத்தக் கடைசி நாள் - மே 2

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x