Published : 19 Mar 2018 10:51 AM
Last Updated : 19 Mar 2018 10:51 AM

6 கியர்களில் மாருதி ஸ்விப்ட்

ந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பு வேறெந்த நிறுவனத்துக்கும் இல்லை என்றே கூறலாம். இதனாலேயே இன்றளவும் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட வாகனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருவதன் மூலம் இந்நிறுவனத் தயாரிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் பட்ஜெட் காராக கருதப்படும் ஸ்விப்ட் மாடலில் மேம்படுத்தப்பட்ட ரகம் விரைவில் வர உள்ளது. அதாவது 6 கியர்களை கொண்டதாக இது வெளி வர உள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஸ்விப்ட் கார் கூட 5 கியர்களைக் கொண்டதுதான்.

தற்போது இந்நநிறுவனத்தின் பிறதயாரிப்புகளான ஆல்டோ, சியாஸ் உள்ளிட்டவையும் ஐந்து கியர்களைக் கொண்டவைதான்.

6 கியர்களைக் கொண்ட ஸ்விப்ட் உருவாக்கும் பணிகள் துரித கதியில் நடைபெறுகின்றன. இது வாகனத்தின் செயல் திறனை மேலும் மேம்படுத்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இந்த வாகனம் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x