Published : 05 Mar 2018 11:56 AM
Last Updated : 05 Mar 2018 11:56 AM

வெற்றி மொழி: சார்லஸ் ஆர் ஸ்விண்டால்

1934-ம் ஆண்டு பிறந்த சார்லஸ் ஆர் ஸ்விண்டால் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மத குருமார், கிறிஸ்தவ போதகர், எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் வானொலி பிரசங்கி. பதினைந்து உலக மொழிகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி நிலையங்களிலிருந்து தனது நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். உலகளாவிய வாசகர்களுக்கான சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் கிறிஸ்துவ புத்தக விற்பனையாளர்கள் ஆணையத்தில் மிகவும் பிரபலமானவை. நான்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

# வாழ்க்கை என்பது பத்து சதவீதம் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது மற்றும் தொண்ணூறு சதவீதம் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது.

# நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நமது குழந்தைகளின் நினைவக வங்கிகளில் பத்திரப்படுத்துவோம்.

# கடந்தகாலத்தை விட, கல்வியை விட, பணத்தை விட, சூழ்நிலைகளை விட மக்களின் சொல் அல்லது செயலை விட அணுகுமுறையானது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

# நல்லது மற்றும் சிறந்தது ஆகிய இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம் என்பது கவனத்திற்குரியது.

# உயர்வான வாழ்க்கையை வாழ்வதற்கான ரகசியம் என்பது உயர்வான எண்ணங்களை சிந்திப்பதில் உள்ளது.

# வாழ்க்கையில் நமது அணுகுமுறைகளின் நம்பமுடியாத தாக்கத்தை, வார்த்தைகளால் ஒருபோதும் போதுமான அளவிற்கு வெளிபடுத்த முடியாது.

# நாம் காணுகின்ற, நாம் கேட்கின்ற மற்றும் நாம் நம்புகின்ற விஷயங்களில் பகுத்தறிதல் வேண்டும்.

# காலப்போக்கில் மீண்டும் பின்னோக்கிச் செல்வதன் மூலமாக, நவீன பிரச்சனைகளை நம்மால் தீர்க்க முடியாது.

# அச்சத்தின் லென்ஸ் நிச்சயமற்ற தன்மையின் அளவினைப் பெரிதுபடுத்துகிறது.

# சவால்களின் அளவை நாம் வழங்கவேண்டிய விஷயங்களால் அளவிடமுடியாது.

# இன்றையதினம் தனித்துவமானது! இது முன்னதாக ஒருபோதும் நிகழ்ந்ததில்லை மற்றும் மீண்டும் ஒருபோதும் வரப்போவதில்லை.

# நீங்கள் எவ்வளவு அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதை அறியும்வரை, உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதைப்பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை.

# சிறப்பானது என்பது ஒரு விதிவிலக்கு அல்ல, அது நடைமுறையில் இருக்கும் அணுகுமுறை.

# பெரிய விஷயங்களில் நீங்கள் சிறந்து விளங்கப்போகிறீர்கள் என்றால், சிறிய விஷயங்களில் அந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x