Published : 13 May 2019 11:01 AM
Last Updated : 13 May 2019 11:01 AM

ஃபோக்ஸ்வேகன் - ஐடி 3

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே வருகிறது. எதிர்காலத்தில் பெரிய அளவில் உருவாகப் போகும் சந்தையைப் பிடிப்பதில் இப்போதே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மும்முரமாக இறங்கிவிட்டன. இப்போது கைவசம் எல்லோரிடமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிதாக ஐடி 3 என்ற எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி உள்ளது. அதன் வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது. மிக வித்தியாசமான டிசைன். பல புதிய அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பங்கள் என அனைத்தும் அட்டகாசம்.

இதனை எலெக்ட்ரிக் வாகனங்களின் புதிய அடையாளம் என்றே சொல்லலாம். இந்த ஐடி 3 மாடல் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்க உள்ள பிராங்க்பர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஹேட்ச்பேக் மாடலான ஃபோக்ஸ்வேகன் ஐடி 3 முழுமையான எலெக்ட்ரிக் கார் ஆகும். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பிரத்யேக எம்இபி எலெக்ட்ரிக் ஆர்க்கிடெக்சரில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஐடி 3 ஃபர்ஸ்ட் என்ற எடிஷனும் உள்ளது. இந்த ஐடி 3 எலெக்ட்ரிக் கார் 45 கிலோ வாட், 58 கிலோவாட், 77 கிலோவாட் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகின்றன.

இவற்றின் திறன் 330 கிமீ முதல் 550 கிமீ வரை பயணிக்கக் கூடியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஐடி 3 ஃபர்ஸ்ட் எடிஷன் மேற்சொன்ன மூன்று பேட்டரி திறனுக்கும் இடையிலான பேட்டரி திறனுடன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஸ்போர்ட்டி டிசைனும், கலர் ஆப்ஷன்களும் சிறப்பாக உள்ளன. அதே சமயம் 980 லிட்டர் லக்கேஜ் ஸ்பேஸ் உள்ளது. இதில் 125 கிலோவாட் பிரஷ்லெஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 100-125 கிலோவாட் திறனில் 30 நிமிடம் சார்ஜ் செய்தால் 260 கிமீ வரை பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019 நவம்பரில் உற்பத்தி தொடங்கப்படுகிறது. 2020-ல் முதலில் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் விற்பனையைத் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

100-125 கிலோவாட் திறனில் 30 நிமிடம் சார்ஜ் செய்தால் 260 கிமீ வரை பயணிக் கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x