Last Updated : 21 May, 2019 11:10 AM

 

Published : 21 May 2019 11:10 AM
Last Updated : 21 May 2019 11:10 AM

உலகக் கோப்பை கிரிக்கெட் ரீவைண்ட்: ரன் அவுட் மன்னன்!

1992 உலகக் கோப்பை லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் பிரிஸ்பேனிவில் விளையாடின. மெக்மில்லன் வீசிய பந்தை இன்சமாம்-உல்-ஹக் அடிக்க முயன்றார். ஆனால், பந்து கால் காப்பில் பட்டு அருகிலேயே விழுந்தது.

பக்கத்தில் யாரும் இல்லை என்பதால் விரைவாக ஒரு ரன் எடுக்க விரும்பி இன்சமாம் கால்வாசி தூரத்தைக் கடந்தார். எதிர்முனையில் இருந்த கேப்டன் இம்ரான்கான், ‘ரன் வேண்டாம்’ என்று சைகை காட்டவே, திரும்பவும் கிரிஸுக்குள் வர இன்சமாம் முயன்றார்.

அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த அதிசயம் நடந்தது. ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஜான்டி ரோட்ஸ் மின்னல் வேகத்தில் ஓடிவந்தார். அதே வேகத்தில் பந்தைக் கையில் எடுத்து, ஸ்டெம்புக்குச் சில அடி தூரம் வந்ததும் அப்படியே புலிபோல் பாய்ந்து ஸ்டெம்புகளைத் தகர்த்து, இன்சமாமை ரன் அவுட் செய்தார். இதுவரை யாரும் இதுபோன்று செய்திராத அந்த ரன் அவுட்டைப் பார்த்து கிரிக்கெட் உலகம் வாயடைத்து நின்றது.

உலகக் கோப்பையில் மட்டுமல்ல, கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் சிறப்பான ரன் அவுட் இது எனப் புகழப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x