Published : 25 May 2019 11:48 AM
Last Updated : 25 May 2019 11:48 AM

அழகூட்டும் விளக்குகள்

விளக்குகள் என்பவை வீட்டுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருபவை. மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் நெய், எண்ணெய், மெழுகு போன்ற பொருட்களால் விளக்குகள் ஏற்றப்பட்டன. முதலில் வெளிச்சத்துக்காக மட்டும் ஏற்றப்பட்ட விளக்குகளில் பிறகு அழகான வேலைப்பாடுகளும் செய்யப்பட்டன.

பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் மெழுகுதிரிகளால் ஆன தொங்கு விளக்குகளை இன்றைக்கும் திரைப்படங்களில் பார்க்க முடியும். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் அதே வடிவ கூடுகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

பிறகு அதிலும் பல புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன. வெளிச்சம் என்பது இரண்டாம் பட்சமாகி, அழகுக்கே முதன்மை தரும் விதத்தில் பலவிதமான விளக்கு வடிவங்கள் இன்றைக்கு உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பிரபலமாகவுள்ள விளக்குகள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது:

மர விளக்குகள்

மரப் பலகையைக் கொண்டு உருவாக்கப்படும் விளக்குகளும் இன்று அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்த விளக்குகளும் பல வடிவங்களில் கிடைக்கின்றன.

இயற்கை விளக்குகள்

இந்த வகை விளக்குகளை இன்றைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் சீனப் பந்து விளக்குகளுடன் ஒப்பிடலாம். இவை இயற்கையான பொருட்களில் செய்யப்படுபவை. காகிதக்கூழ், மூங்கில், சணல் போன்ற பொருட்களால் இவை செய்யப்படுகின்றன.

மர விளக்குகள்

மரப் பலகையைக் கொண்டு உருவாக்கப்படும் விளக்குகளும் இன்று அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன. இந்த விளக்குகளும் பல வடிவங்களில் கிடைக்கின்றன.

சதுர வடிவ விளக்குகள்

இந்த வகை விளக்குகள் உலோகச் சட்டகத்தால் உருவாக்கப்படுபவை. இந்தச் சட்டகத்துக்கு நடுவே விளக்கு பொருத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த விளக்கு கிளாசிக் வடிவத்தை ஒத்தது. இதில் செவ்வக வடிவம் உள்ளிட்ட பல வகை உண்டு.

உலோக விளக்குகள்

உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த விளக்குகள் இன்றைக்கு அதிகமாக விரும்பப்படும் வடிவமாக இருக்கின்றன. வீட்டுக்கு ஒரு புதிய தோற்றத்தைத் தரக்கூடியது இது.

கிளாசிக் விளக்குகள்

இவை இண்டஸ்ரியல் விளக்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் விளக்குகளைப் போன்ற தோற்றத்தில் உள்ளவை. இந்த விளக்குகள் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நூற்றாண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்தவை. அவை இன்றைக்கு மறுஜென்மம் எடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x