Published : 20 May 2019 12:48 PM
Last Updated : 20 May 2019 12:48 PM

வெற்றி மொழி: ஆட்ரே லார்டே

1934-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஆட்ரே லார்டே அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், பெண்ணியவாதி, நூலகர், கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர் மற்றும் சிவில் உரிமைகள் ஆர்வலர் ஆவார். ஒரு கவிஞராக தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர்.

தனது வாழ்வில் அவர் உணர்ந்த சிவில் மற்றும் சமூக அநீதிகளில் கோபம் மற்றும் சீற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரது கவிதைகள் இருந்தன. மேலும், இவரது படைப்புகள் பெரும்பாலும் சிவில் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பெண்ணியம் போன்றவற்றை தழுவியதாக உள்ளன.

# உங்கள் முரண்பாடுகளுக்கு இசைவாக வாழ கற்றுக்கொள்வதன் மூலமாக நீங்கள் அதை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

# உங்கள் மௌனம் உங்களைப் பாதுகாக்காது.

# கலை என்பது வாழ்க்கை அல்ல. அது வாழ்க்கைக்கான பயன்பாடு.

# புதிய யோசனைகள் என்று எதுவும் இல்லை. அவற்றை உணர்வதற்கான வழிமுறைகள் மட்டுமே புதியவை.

# வாழ்க்கை மிகவும் குறுகியது, நாம் செய்ய வேண்டியது இப்போதே செய்யப்பட வேண்டும்.

# ஒற்றை சிக்கல் நிறைந்த போராட்டம் என்று எதுவுமில்லை, ஏனெனில் நாம் ஒற்றை சிக்கல் வாழ்வை வாழவில்லை.

# புரட்சி என்பது ஒரு நேர நிகழ்வு அல்ல.

# நமது உணர்வுகளே அறிவிற்கான நமது உண்மையான பாதைகள்.

#சமூகம் என்ற ஒன்று இல்லாமல், விடுதலை என்பது இல்லை.

#நாம் இந்த உலகத்தில் பார்க்க விரும்பும் மாற்றமாக நாம் இருக்க வேண்டும்.

# கடினமான நேரங்களில், ஏதாவது செய்யுங்கள். அது செயல்பட்டால், இன்னும் சிலவற்றை செய்யுங்கள். அது செயல்படவில்லை என்றால், வேறு ஏதாவது செய்யுங்கள். ஆனால், தொடர்ந்து செயல்படுங்கள்.

# நமது பார்வை நமது விருப்பங்களிலேயே தொடங்குகின்றன.

# நீங்கள் தேடுகின்ற அந்த நபர் நீங்கள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x