Published : 22 Apr 2019 11:46 AM
Last Updated : 22 Apr 2019 11:46 AM

சுஸூகி-யின் பிரீமியம் பைக் ஜிஎஸ்எக்ஸ் எஸ்750

பிரீமியம் மோட்டார் சைக்கிள் சந்தை இந்தியாவில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. பிரிட்டனின் டிரையம்ப், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்ஸன், இத்தாலியின் பெனலி, ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ என மோட்டார் சைக்கிள் வரிசை கட்டி நிற்க, ஜப்பானிய தயாரிப்புகளான ஹோண்டா, யமஹா, கவாஸகி என இந்நிறுவனங்களும் பிரீமியம் பைக்குளை களமிறக்கி வருகின்றன.

இதில் முக்கியமான விஷயமே இந்த அனைத்து மாடல் பிரீமியம் பைக்குகளும் இந்தியாவில் தாராளமாகக் கிடைப்பதுதான். இந்த வரிசையில் சுஸுகி நிறுவனம் தனது ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்த இந்த தயாரிப்பு தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ. 7.46 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெடாலிக் மேட் பிளாக் மற்றும் பேர்ல் கிளேசியர் வொயிட் ஆகிய வண்ணங்களில் இது வந்துள்ளது.

ஜிஎஸ்எக்ஸ்-எஸ் 1000 மாடல் மோட்டார் சைக்கிளின் மாடலை அடியொற்றி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 749 சிசி திறன் கொண்டது. லிக்விட் கூல்டு, டிஓஹெச்சி, 4 சிலிண்டர் மோட்டாரைக் கொண்டது. 114 பிஹெச்பி திறனை 10,500 ஆர்பிஎம் வேகத்திலும், 81 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 9 ஆயிரம் ஆர்பிஎம் வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 6 கியர்கள் உள்ளன.

இதில் 411 மி.மீ. யுஎஸ்டி போர்க் உள்ளது. இது அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலானது. நிசான் டிஸ்க் பிரேக் உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் கவாஸகி இஸட் 900 (ரூ. 7.69 லட்சம்), டிரையம்ப் ஸ்ட்ரீட் எஸ் (ரூ. 9.19 லட்சம்), யமஹா எம்டி-09 (ரூ. 10.55 லட்சம்) ஆகியவற்றுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x