Published : 15 Apr 2019 01:12 PM
Last Updated : 15 Apr 2019 01:12 PM
கேட்ஜெட்டுகளின் அடுத்தகட்டம் என்றால் அது வளையக்கூடிய ஓலெட் டிஸ்பிளே என்று சொல்லலாம். வளைக்கக் கூடிய மடிக்கக் கூடிய டிஸ்பிளேக்களைக் கொண்ட கேட்ஜெட்டுகள் ஒவ்வொன்றாக சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் வளையக் கூடிய ஓலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ள ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை நுபியா நிறுவனம் வரும் மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்போர்ட்ஸ் வாட்ச் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்சுக்கு நுபியா ஆல்பா ஸ்மார்ட் வாட்ச் என பெயரிட்டுள்ளது.
இந்த வாட்ச் பிரேஸ்லெட் போலவும் இருப்பது கூடுதல் அழகு. போன் கால்கள், மெசேஜ் அனுப்பு வது என அனைத்தும் இதில் செய்து கொள்ளலாம். ஒரு ஜிபி ரேம், 8 ஜிபி மெமரியுடன், 500 எம்ஏஹெச் பேட்டரி திறனுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை அதன் வேரியன்ட்களைப் பொருத்து ரூ.36,200 - 52,400 வரை இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT