

ஆர்கிடெக்ட் படிப்பில் சேர உங்களுக்கு ஆசையா? அதற்கு ‘நாட்டா’ என்றழைக்கப்படும் ‘நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்’ என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் பங்கேற்பது அவசியம்.
இந்தத் தேர்வில், வென்றால் மட்டுமே இந்தியாவில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் ஆர்கிடெக்ட் படிப்பான பி.ஆர்க்.கில் சேர முடியும். இந்த ஆண்டு முதல் இந்தத் தேர்வு இரண்டு முறை நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்வு முடிவடைந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டத் தேர்வு ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது.
12-ம் வகுப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். ஆனால், இறுதித் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கணினி வழியாகத் தேர்வு நடத்தப்படும்.
120 மதிப்பெண்களுக்குக் கணிதம், பொது அறிவுப் பிரிவிவிலிருந்து அப்ஜெக்டிவ் வகையில் கேள்விகள் கேட்கப்படும். எஞ்சிய 80 மதிப்பெண்களுக்கு வரையும் திறன் பரிசோதிக்கப்படும். தவறான விடைகளுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண் கிடையாது.
நாட்டாவின் அதிகாரபூர்வ வலைத்தளத்துக்குச் சென்று தேர்வில் பங்கேற்க விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 12.
மேலும் விவரங்களுக்கு: www.nata.in தேர்வு பராக்...