Published : 15 Apr 2019 12:09 PM
Last Updated : 15 Apr 2019 12:09 PM

ஜீப் காம்பஸ் ‘ட்ரெயில்ஹாக்’

சந்தையில் நீண்டகாலமாகவே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது ஜீப் காம்பஸ் பிராண்டின் ‘ட்ரெயில்ஹாக்’ எஸ்யுவி. சந்தையில் லேட்டாக வந்தாலும் விரைவிலேயே எஸ்யுவி பிரிவில் கார் பிரியர்களின் மனங்கவர்ந்த பிராண்டாக மாறியிருக்கிறது ஜீப் காம்பஸ்.

இந்த பிராண்டிலிருந்து விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கும் ‘ட்ரெயில்ஹாக்’ எஸ்யுவி ஆஃப்ரோடு பெர்பாமென்ஸுக்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

வீட்டிலிருந்து அலுவலகம், அலுவலகத்திலிருந்து வீடு என்று வழக்கமான டிரைவிங் அனுபவத்திலிருந்து வெளியே வந்து, கரடுமுரடான மலைப் பாதைகளில் அட்வென்சர் அனுபவம் பெற விரும்புபவர்களுக்காக வருகிறது இந்த ‘ட்ரெயில்ஹாக்’.

இதில் ஆஃப்ரோடு டிரைவுக்கான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ராக் மோட் டெரைன் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இதன் 225 மிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஸ்டேண்டர்ட் ஜீப் காம்பஸ் காரைக் காட்டிலும் சற்று அதிகம்.

அதேபோல் வாட்டர் வேடிங் டெப்த்தும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டேண்டர்ட் ஜீப் காம்பஸில் 405 மிமீட்டராக இருக்கும் வாட்டர் வேடிங் டெப்த், இதில் 480 மிமீட்டராக உள்ளது. ஆஃப்ரோடுக்கு ஏற்ற ஆல் சீசன் டயர்கள் இதில் உள்ளன.

இதில் முதன்முறையாக 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பது கூடுதல் விசேஷம். மேலும் பிஎஸ் 6 புகை விதிமுறைகளும் இதன் 2.0 லிட்டர் இன்ஜினில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 170 ஹெச்பி மற்றும் 350 என்எம் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதன் விலை ரூ. 27 லட்சம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x