Published : 30 Mar 2019 05:53 PM
Last Updated : 30 Mar 2019 05:53 PM

கோடைகாலக் குறிப்புகள்

> வெயில் காலத்தில் வீட்டில் மண்பானையில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், துளசி இலைகள் ஆகியவற்றைப் போட்டுவைத்த தண்ணீர் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்.

> வேப்ப இலைகளை இரவே குளிக்கும் நீரில் போட்டுவைத்து நன்றாக ஊறவிட்டுக் குளித்தால் வெயில் காலத்தில் வரும் சருமப் பிரச்சினைகள் குறையும்.

> வெயில் நேரத்தில் உண்டாகும் களைப்பு, தலைச்சுற்றல் நீங்க குடிநீரில் ஏலக்காய்ப் பொடி, சுக்குப்பொடி, வெல்லத் தூள், எலுமிச்சைப் பழம் பிழிந்து குடித்தால் புத்துணர்வு கிடைக்கும்.

> உடல் குளிர்ச்சிக்கு பாசிப்பருப்பை ஊறவிட்டு வடிகட்டி அதனுடன் தேங்காய்த் துருவல், மாங்காய், வெள்ளரிக்காய்த் துருவல், உப்பு, பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து எலுமிச்சம் பழம் பிழிந்து சாலட்டாகச் சாப்பிடலாம்.

- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.

> வெள்ளரிக்காயுடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து சிறிதளவு சீரகத்தூள் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.

> அண்ணாச்சி பழம், மாதுளை, ஆரஞ்சு, பச்சை வாழை, கொய்யா, பப்பாளி, தர்பூசணி ஆகிய பழங்களில் ஏதேனும் ஒன்றைத் தினமும் கொடுத்தால் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகள் வராது.

> தேங்காய்ப் பாலுடன் சிறுவெங்காயச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். தலையில் உள்ள பொடுகு தொல்லை நீங்கும்.

> வெயில் காலத்தில் பலர் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். அதற்குப் பதில் நல்லெண்ணெய்யில் பூண்டு பல்

ஒன்று, ஓமம், கறிவேப்பிலை, வெற்றிலைக் காம்பு ஆகியவற்றைச் சேர்த்து லேசாகச் சூடாக்கி, தலையில் தேய்த்து மிதமான நீரில் குளிப்பது நல்லது.

> எலுமிச்சைச் சாற்றை முகத்தில் பூசிவந்தால் எண்ணெய்ப் பிசுபிசுப்புத்தன்மை குறையும்.

- தேவி, சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x